உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதையின் நாயகனாக யோகிபாபு

1 mins read
93b37228-051e-4d8c-a161-32360f09aef2
யோகிபாபுவுடன் படக்குழுவினர். - படம்: ஊடகம்

அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய காதல் கதையில் யோகிபாபு நடிக்கிறார். அப்புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

தேவி சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கிறது.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தில் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரா.ராஜ்மோகன் அப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதுவரை பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகிபாபு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அனாமிகா மகி நாயகியாக அப்படத்தில் அறிமுகமாகிறார்.

இதுமட்டுமன்றி, இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து காளி வெங்கட், ‘அயலி’ மதன், பாவா லக்‌ஷ்மன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்