விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஏஸ்’ படத்தில் யோகிபாபு பெண் வேடமிட்டு நடித்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ‘மகாராஜா’ மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ‘ஏஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தை ஆறுமுகக்குமார் இயக்கியுள்ளார்.
இதற்கு முன் ஆறுமுகக்குமார் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
படத்தின் முன்னோட்டக் காட்சி சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தின் முதல் பாடலான ‘உருகுது உருகுது’ பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
மேலும், இத்திரைப்படம் இம்மாதம் 23ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபுவின் புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதல் ஒரு புகைப்படத்தில் யோகி பாபு பெண் வேடம் அணிந்து உள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.