ஜூலை 17ல் திரை காணும் யோகி பாபுவின் 300வது படம்

ஜூலை 17ல் திரை காணும் யோகி பாபுவின் 300வது படம்

1 mins read
a03eaec5-e7b8-4749-9ee2-eb262698c97f
‘அர்ஜுனன் பேர் பத்து’ படக் காட்சி.  - படம்: இன்ஸ்டகிராம்
multi-img1 of 2
Google News Preferred Icon

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான யோகி பாபுவின் 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் புதிய சுவரொட்டியுடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஆர்.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்திற்குப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும், இக்கதையில் யோகி பாபுவுடன் இணைந்து காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிகக் குறுகிய காலத்தில் தன் அசாத்திய நகைச்சுவை, நடிப்புத் திறமையால் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற யோகி பாபு, இந்தப் படத்தின் மூலம் தனது 300வது திரைப் பயண மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஒரு நடிகராக யோகி பாபுவின் திரையுலக வரலாற்றில் இந்த ‘அர்ஜுனன் பேர் பத்து’ மிக முக்கியப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்