தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணத்தைப் பதுக்குவதாக யோகிபாபு மீது குற்றச்சாட்டு

1 mins read
67853b3a-f079-46ee-a08e-fb038ade328c
யோகி பாபு, அந்தணன். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தனது கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்திருக்கிறார்.

பல படங்களிலும் பரபரப்பாக நடித்து வரும் இவர், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

அளவுக்கு அதிகமான படங்களில் நடித்துக்கொடுப்பதாக ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு வர மறுப்பதாகவும் இதனால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் யோகிபாபு மீது வலைப்பேச்சு பத்திரிகையாளர்கள் யூடியூப் ஒளிவழியில் விமர்சித்தனர்.

அவர்களின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி தரும் வகையில், பேட்டி ஒன்றை அளித்துள்ள யோகிபாபு, நான் அவர்களை முறையாகக் கவனிக்கவில்லை என்பதால் என்னைப்பற்றி விமர்சித்துள்ளனர். அவர்களுக்குப் பணம் கொடுத்து திருப்திப்படுத்தவில்லை எனில் இப்படித்தான் பேசுவார்கள் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், யோகிபாபுவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு வலைப்பேச்சாளரான அந்தணன், பிஸ்மி ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதோடு அவரைப்பற்றி சில திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டு உள்ளனர்.

யோகிபாபு சொன்னது அனைத்தும் பொய். அவர் நாங்கள் பணம் வாங்கியது உண்மைதான் என்பதை நிரூபிக்கத் தயாரா என்று கேள்வியெழுப்பி உள்ளனர்.

அத்துடன், யோகிபாபு ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் அதில் 5 லட்சத்தை மட்டும் கணக்கு காட்டிவிட்டு மீதி ரூ.20 லட்சம் பணத்தை கறுப்புப் பணமாக பதுக்கி வருவதாகவும் வலைப்பேச்சாளர் பிஸ்மி சாடியுள்ளார்.

அத்துடன், முன்னதாக அஜித் தன்னைத் தொடக்கூடாது எனக் கூறியிருந்ததாகவும் யோகிபாபு பற்றி கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்