நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. தற்போது பல்கேரியாவில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளனர்.
படப்பிடிப்புக்கு இடையே எடுக்கப்படும் புகைப்படங்கள், காணொளிகளை இப்படக் குழுவினர் தற்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அஜித்துடன் யோகி பாபு இருக்கும் புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள், இந்தப் புகைப்படங்களைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.