உங்களால் உண்மையை மாற்றி எழுதவே முடியாது: குமுறும் ஆர்த்தி ரவி

2 mins read
b80506e0-7327-4401-9d78-8e949d91f89c
(இடமிருந்து) கேனிசாவுடன் ரவி மோகன், ஆர்த்தி. - படங்கள்: ஊடகம்

நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வது தெரியும்.

இருவரையும் எப்படியாவது சமாதானப்படுத்தி, மீண்டும் சேர்த்து வைத்துவிடலாம் என்பதே இருவரது நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் பெரும் நம்பிக்கையாக இருந்தது.

ஆனால், அண்மையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கேனிசாவுடன் பங்கேற்றதை அடுத்து, இந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக இருதரப்பு நண்பர்களும் கூறுகின்றனர்.

ரவி மோகன் இதுநாள் வரை கேனிசாவை தனது தோழி என்றே பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தார்.

இப்போது இருவரும் ஜோடியாக வலம் வருவதை ஆர்த்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், “கடந்த ஓராண்டாக நான் அமைதிக் கவசம் பூண்டிருந்தேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல; என் மகன்களுக்கு என்னைவிட அதிகமான அளவில் அமைதி தேவைப்பட்டது என்பதால்தான்,” என்று மனக்குமுறலைக் கொட்டியுள்ளார் ஆர்த்தி.

“என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும், அத்தனை வசைபாடுதல்களையும், எனை நோக்கி முணுமுணுக்கப்பட்ட கடுஞ்சொற்களையும் கூட உள்வாங்கிக் கொண்டிருந்தேன். என் மேல் உண்மை இல்லை என்பதற்காக அல்ல; என் குழந்தைகளுக்கு பெற்றோர்களில் யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காக!

“இன்று, இந்த உலகம் கவனமாக தொகுக்கப்பட்ட தோற்றங்களை, புகைப்படத் தலைப்புகளைக் கண்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மை நிலை வேறாக இருக்கிறது. எனது விவாகரத்து வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

“ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்னர் நான் யாரின் அருகில் காதலுடன், நம்பிக்கையுடன், உண்மையுடன் நின்றேனோ, அவர் என்னைவிட்டு விலகிச் சென்றுள்ளார். என்னை மட்டும் விட்டு விலகிச் செல்லவில்லை, எனக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் துறந்து சென்றுள்ளார்.

இன்று நான் வாழும் வீட்டைவிட்டு வெளியேறும்படி வங்கி உத்தரவு வருகிறது. அதுவும், அந்த வீட்டை என்னுடன் சேர்ந்து பார்த்துப் பார்த்து கட்டியெழுப்பியவரின் உத்தரவின் பேரில் வருகிறது,” என்று தமது பதிவில் ஆர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்