ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்புவிழா நடக்கும் சமயத்தில் ‘கடவுளை யாரும் ஏமாற்றவே முடியாது’ என்று அவரின் மனைவி ஆர்த்தி தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரவி மோகனின் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிவிட்டது. தன் பெயரிலேயே அவர் தயாரிப்பு நிறுவனத்தை அமைத்துள்ளார்.
திறப்பு விழாவில் தனக்குப் பிடித்தமான நடிகரான விண்வெளி நாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
இந்தச் சமயத்தில்தான் ஆர்த்தி, “நீங்கள் கடவுளை முட்டாளாக்க முடியாது. மற்றவர்களை வேண்டுமானால் முட்டாளாக்கலாம். ஏன் உங்களையே கூட முட்டாளாக்கிக்கொள்ளலாம். ஆனால் கடவுளை மட்டும் முட்டாளாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அவர், ரவி மோகனை மனதில் வைத்துதான் இவ்வாறு கூறியிருக்கிறார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். முக்கியமான நேரத்தில் ரவி மோகன் அருகில் இருக்க வேண்டியவர் ஆர்த்தி. ஆனால், பாவம் யாரோ மூன்றாவது ஆள் மாதிரி இன்ஸ்டாவில் மறைமுகமாகப் பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்.
இரண்டாவது பதிவில் ஆர்த்தி, ‘பேரன்டிங்’ குறித்து எனக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது தெரியுமா? “எப்பொழுதும் உங்கள் பிள்ளைகள் பக்கம் இருங்கள். அந்த அப்பாவிகளுக்கு உங்களின் அன்பும், நேரமும் தேவை. எது நடந்தாலும் உங்கள் பிள்ளைகளின் மன அமைதியைக் காப்பாற்றுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்த்தி விவாகரத்து கோரியுள்ளார். ரவி மோகனும் ஆர்த்தியும் பிரிந்து வாழ்வதால் மகன்கள் ஆரவ், அயான் தந்தையுடன் இல்லை. இருந்தாலும் மகன்களைத் தன்னிடம் கொண்டு வர கடைசி வரை போராடுவேன் என்று தெரிவித்துள்ளார் ரவி மோகன். தற்போது அம்மாவுடன் வசித்து வரும் மகன்கள் அப்பாவைப் பார்க்க முடியாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
முன்னதாக ஸ்டுடியோ தொடர்பாக குன்றக்குடி முருகன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தபோதும் ரவி மோகனுடன் அவரின் உடற்பிடிப்பு சிகிச்சையாளர் கெனிஷா பிரான்சிஸ் உடன் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே ரவி மோகனின் ஈசிஆர் பங்களாவுக்கு 10 மாதங்களாக இஎம்ஐ கட்டாததால் வீட்டைப் பறிப்பதற்கான கடிதத்தை வங்கி அனுப்பியுள்ளது. அந்தக் கடிதம் வந்தபோது ரவி மோகனும் கெனிஷாவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் வெளியானது.

