தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யாவுடன் இணைந்த இளம் நடிகை

1 mins read
337b349a-6080-432d-b6c7-4d545fcf2b62
நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கும் அனகா ரவி. - படம்: ஊடகம்

சூர்யாவின் 45வது படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் மலையாள நடிகை அனகா ரவி.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1ல் வெளியாகிறது. அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்போது மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை அனகா ரவி இணைந்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் நடித்துள்ளார். அதற்கான விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரே இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை