தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகையாக மாறிய இளம் பாடகி

1 mins read
076c88d3-8bed-44a9-90ac-410cdad808d4
நிஹாரிகா. - படம்: ஊடகம்

இளையர்களின் மனதைக் கவர்ந்த இளம் பாடகி நிஹாரிகா, தற்போது இசைத்தொகுப்பு ஒன்றில் நடிக்கவும் செய்துள்ளார்.

விஷால் சுரேஷ் இசையமைத்துள்ள இந்த இசைத்தொகுப்பில், நடிகர் தர்ஷன் நிஹாரிகாவுடன் நடித்துள்ளார்.

அருண் பிரபா பாடல்களை எழுத, அபிஜித் ஸ்வேதா ஆகிய இருவரும் பாடியுள்ளனர்.

இசைத்தொகுப்பு மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி உள்ளது.

தமிழில் ‘கடலோரக் கவிதை’ என்றும் மலையாளத்தில் ’ஈ தீரம்’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

அண்மைக் காலமாக நிஹாரிகாவுக்கு வாய்ப்புகள் குறைந்து வருவதால்தான் அவர் நடிக்கத் தொடங்கியதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்