ரூ.100 கோடியை நோக்கி ‘யூத்’

ரூ.100 கோடியை நோக்கி ‘யூத்’

1 mins read
63c69cc3-f856-431d-849d-f0fa782752d8
‘யூத்’ படக்காட்சி. - படம்: விகடன்
Google News Preferred Icon

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ்.

அதனைத் தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.

இவர் இயக்கி, நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை உலக அளவில் ரூ.82 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் விரைவில் ரூ.100 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்