பி.கிருஷ்ணனுக்கு கலா ரத்னா விருது

பி.கிருஷ்ணனுக்கு கலா ரத்னா விருது

1 mins read
bba2bffb-fe4e-446a-a9b8-bfce93cf9faf
-
Google News Preferred Icon

தமிழ் இலக்கியத்திற்கு அரும் பங்காற்றியுள்ள திரு கிருஷ்ணன் பெருமாளுக்கு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், கலா ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. அந்த விழாவின்போது திரு பி.கிருஷ்ணனின் வாழ்நாள் சாதனைக்குச் சிறப்பு சேர்க்கப் பட்டது. 'புதுமைதாசன்' எனும் புனைப் பெயரில் திரு பி.கிருஷ்ணன் கைகளிலிருந்து மலர்ந்த நாட கங்கள், கவிதைகள் சிங்கப்பூரில் மட்டுமின்றி அண்டை நாடான மலேசியாவிலும் பாராட்டுகளைப் பெற்றவை.

சமூக விழிப்புணர்வுக்கும் தமிழ்மொழி, பண்பாடு ஆகிய வற்றுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பதை அவரது படைப்பு களிலிருந்து காணலாம். அவர் கையாண்ட தெளிவான உரைநடை வாசகர்களின் மனதை ஈர்த்தது என்று சொன்னால் அது மிகையன்று. திரு பி.கிருஷ்ணன் மலாயா வில் பிறந்தவர். சிறு வயதிலேயே சிங்கப்பூருக்கு வந்த அவர், தமது சொந்த முயற்சியில் சிறந்த இலக்கியவாதிகளுக்கான பட்டி யலில் இடம்பிடித்தார்.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜாவிடமிருந்து கலா ரத்னா விருதைப் பெறும் திரு பி.கிருஷ்ணன் (இடது). படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்