பணமும் உடைகளும் கொடுத்து உதவிய ஹனிபா டெக்ஸ்டைல்ஸ்

2 mins read
877577ea-fb63-4c74-9830-15ff6404920c
-

கேரளாவில் வெள்ளப் பெருக்கால் அவதியுற்றோருக்கு உதவ சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) சிங்கப்பூர் மலையாளிகள் சங்கத்துடன் இணைந்து, லிட்டில் இந்தியாவின் ஆர்க்கெட்டுக்கு முன்பு நன்கொடைக் கூடாரம் ஒன்றை அமைத்துள்ளனர். சென்ற மாதம் 28ஆம் தேதி அமைக்கப்பட்ட இந்த நிதி திரட்டு கூடாரம் (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) இம்மாதம் 20ஆம் தேதி வரை இருக்கும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9.15 மணி வரை இயங்கும் இந்தக் கூடாரம் சிங்கப்பூர் மலையாளிகள் சங்கத் தைச் சேர்ந்த தொண்டூழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அத்துடன், பொதுமக்கள் நன்கொடை வழங்க வசதியாக இணையத்தளம் ஒன்றையும் சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம் உருவாக்கியுள்ளது. நன்கொடை அளிக்க விருப்பம் உடையவர்கள் https://floodrelief. org.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

தற்போது, பொதுமக்களிட மிருந்து திரட்டும் நன்கொடை பெரும்பாலும் பணமாக இருப்பது நல்லது என்றும் வழங்கப்படும் நன்கொடை சிங்கப்பூர்ச் செஞ்சிலு வைச் சங்கத்தின் வழியாக பாதிக் கப்பட்டவர்களைச் சென்றடையும் என்றும் மலையாளிகள் சங்க உறுப்பினரும் வெள்ள நிவாரண முயற்சிகளை மேற்கொள்ளும் அமைப்பின் தலைவருமான திரு ஜீ.வி.நாதன் கூறினார். "செஞ்சிலுவைச் சங்கத்தின் மதிப்பீட்டின்படி கேரளாவில் அதிக சேதம் ஏற்பட்ட பகுதிகளில், என்னென்ன வளங்கள் வேண்டும் என்பதைக் கண்டறிந்து வேண்டிய உதவிகளைச் செய்ய விரும்பு கிறோம். பள்ளி, மருத்துவமனை, வீடு போன்ற அடிப்படை வசதி களை மறுகட்டமைப்பு செய்யத் திட்டமிடுகிறோம்," என்றார் திரு நாதன். இம்மாதத் தொடக்கத்தில் கேரளாவின் இடுக்கி மாவட் டத்திற்கு 3,500 கிலோ எடையுள்ள துணிகள், உணவுப் பொருட்கள் போன்ற வற்றை உள்ளடக்கிய நன் கொடையை சிங்கப்பூர் மலையாளி கள் சங்கம் "Y's Men International" என்ற அரசு சார் பற்ற அமைப்புக்கு அனுப்பி உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி ஹனிபா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அப்துல் சமது, கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார். அவர்களுடன் (இடமிருந்து) ஹனிபா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி ஜொசே வர்கிஸ், கேரள எம்.எல்.ஏ. கணேஷ் குமார். படம்: ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸ்