சங்கரின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் முதன் முறையாகக் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. சுமார் 23 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் ஆகியவற்றில் முத்திரை பதித்து வந்த திருமதி ஜெயந்தி கடந்த ஆண்டு தொடக்கம் முதல் ஓவியங்கள் தீட்டுவதில் ஆர்வம் கொண்டு அந்தக் கலையின் நுணுக்கங்களைச் சுயமாக கற்றுக்கொள்ள முனைந்தார். 'சார்க்கோல்', 'பென்சில்', 'பேஸ்டல்', 'அக்ரிலிக்' ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஓவிய முறைகளை முயற்சித்துப் பார்த்துள்ள அவர், 'சார்க்கோல்', 'வாட்டர்கலர்' ஆகியவற்றைப் பயன்படுத்தி வரையும் ஓவியங்களில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்.
இயற்கை, புராணக்கதை, கட்டடக்கலை போன்றவற்றை வரைவதில் ஆர்வம் காட்டும் திருமதி ஜெயந்தி சங்கரின் ஓவியங்கள் இணைய சஞ்சிகைகள், சந்தைப்படுத்தும் புத்தகங்கள் போன்றவற்றில் வெளியிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களின் 1,000 ஓவியப் படைப்புகளைத் தொகுக்கும் முயற்சியிலும் அவரது ஓவியம் இடம்பெறும். ஒவ்வொரு படைப்பையும் தியானமாகக் கருது வதாகச் சொல்லும் திருமதி ஜெயந்தி, படைப்புகளை உருவாக்கும்போது ஏற்படும் அனுபவம் அற்புதமானது என்கிறார். தற்போது ஆங்கில மொழியில் நாவல் ஒன்றை எழுதும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார் திருமதி ஜெயந்தி.
பன்முகக் கலைஞரான திருமதி ஜெயந்தி சங்கரின் கைவண்ணத்தில் 'வாட்டர்கலர்' பயன்படுத்தி உருவாக்கப்பட்டது இந்த ஓவியம். படகு ஒன்றிலிருந்து சிங்கப்பூர் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கடைகளைச் சித்திரிக்கும் வண்ணம் இது வரையப்பட்டதாகக் கூறினார் திருமதி ஜெயந்தி. படம்: ஜெயந்தி சங்கர்

