திரு கே. கார்த்திகேயன், குமாரி கே. தனலட்சுமி ஆகியோரைத் தொடர்ந்து திரு அரசு துரைசாமி, 50, தேசிய தொழிற்சங்க காங்கிரசின் பிரதிநிதியாக நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை மேற்கொள்கிறார். சிங்கப்பூர் துறைமுக ஊழியர் தொழிற்சங்கத்தில் (Singapore Port Workers' Union) 1993ஆம் ஆண்டில் சேர்ந்து, 2014ஆம் ஆண்டில் அச்சங்கத்தின் பொதுச் செயலாளாராக உயர்ந்த இவர், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் மத்திய குழுவிற்கு (Central Committee) 2011, 2015ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப் பட்டார்.
தேசிய சம்பள மன்றம், பொதுப் போக்குவரத்து மன்றத்தில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் பேராளர் என தேசிய முத்தரப்புக் குழுக்களி லும் சேவையாற்றிய அனுபவம் திரு அரசுக்கு உண்டு. அனைத்துலகப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்திலும் இவர் ஓர் உறுப்பினர். 'ஊழியர்கள் மறுபயிற்சி, தகுந்த திறன்களை வளர்த்துக் கொள்வது ஆகியவற்றுக்குத் திரு அரசு பெரும் ஆதரவு தருபவர். 'திரு அரசு, தன்னலமற்ற தொண்டாற்றுபவர். கடப்பாடுமிக்க வர். உறுப்பினர்கள், ஊழியர்கள், நண்பர்கள், நிர்வாகக் குழுவினர் களிடையே மதிப்பும் மரியாதையை யும் பெற்றுள்ளவர்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் பிரதிநிதியாக நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை மேற்கொள்ள இருக்கும் திரு அரசு துரைசாமி. படம்: என்டியுசி

