வீட்டுப் பொறுப்புடன் நாட்டுப் பொறுப்பு

வீட்டுப் பொறுப்புடன் நாட்டுப் பொறுப்பு

2 mins read
ed0e961e-d308-42f1-802f-c4294643bf5d
-

இர்ஷாத் முஹம்மது

புதிய நியமன நாடாளுமன்ற உறுப் பினர்கள் பட்டியல் கடந்த திங்கட்கிழமை வெளியானபோது அந்தப் பொறுப்பை இரண்டு இந்தியர்கள் ஏற்க இருப்பதை அறிந்து இந்திய சமூகத்தினர் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த திரு அரசு துரைசாமியும் 'ரோசஸ் ஆஃப் பீஸ்' எனும் சமூக அமைப்பின் நிறுவனர் அப்பாஸ் அலி முஹம்மது இர்ஷாத்தும் அந்த இருவர்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இந்த இருவரும் இந்த நியமனம் வழி இந்திய சமூகத்திற்குப் பெருமை தேடித்தந்துள்ளனர். இவர்கள் இருவரும் இம்மாதம் 26ஆம் தேதி அதிபர் ஹலிமா யாக்கோப் முன்னிலையில் பதவி ஏற்பர். மாணவப் பருவத்திலிருந்தே சமூகப் பணிகளில் ஈடுபட்டு சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள 29 வயது முஹம்மது இர்ஷாத், இந்தப் பதவியை ஏற்கும் ஆக இளைய இந்தியர் என்ற பெருமையை இதன் மூலம் ஏற்படுத்தி உள்ளார்.

இந்தப் பெருமை ஒரு பக்கம் இருக்க, இளம் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இர்ஷாத் இன்னும் மகிழ்ச்சிக் குதூகலத்தில் திளைக்கிறார். இந்த அறிவிப்பு வந்ததற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமைதான் இந்த இளையருக் குத் திருமணம் நடந்தது. மணவாழ்வைத் தொடங்கி வீட்டில் குடும்பப் பொறுப்பை ஏற்ற கையோடு, திரு இர்ஷாத் சிங்கப் பூரர்களைப் பிரதிநிதிக்கும் நாட்டுப்பொறுப் பையும் ஏற்கிறார். பேரியக்கமாகப் பரிணாமம் 2012ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பு பயின்று வந்த திரு இர்ஷாத், 'அமைதி ரோஜாக்கள்' என்று பொருள்படும் 'ரோசஸ் ஆஃப் பீஸ்' அமைப்பை நிறுவினார்.

பல இனம், பல சமயம், பல மொழிகள் பேசும் சமூகத்தில் வாழும் சிங்கப்பூரர் கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் ரோஜா மலருடன் அமைதியையும் அன்பை யும் பரப்பும் செய்தியைத் தொண்டூழி யர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு திரு இர்ஷாத் பரப்பி வருகிறார். சிறிய குழுவாகத் தொடங்கிய இந்த அமைப்பு, இப்போது 3,000 தொண்டூ ழியர்களைக் கொண்ட பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. சிங்கப்பூரில் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் உன்னத நோக்கத்தைத் தமது கொள்கையாக ஏற்றுள்ள இர்ஷாத், பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மன்றத்தையும் நிறுவியுள்ளார்.

'அமைதி ரோஜாக்கள்' என்று பொருள்படும் 'ரோசஸ் ஆஃப் பீஸ்' எனும் சமூக அமைப்பின் நிறுவனரும் தலைவருமான 29 வயது திரு அப்பாஸ் அலி முஹம்மது இர்ஷாத், புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத் (சிங்கப்பூர் கிளை) தலைவரும் பட்டயக் கணக்காய்வாளருமான டாக்டர் எம் ஏ காதர் அவர்களின் மகள் ஃபஹிமா ஃபர்ஹாவுடன் இவருக்குத் திருமணம் நடந்ததற்கு அடுத்த நாள் அந்த தகவல் வெளியானது. தமது மனைவியுடன் அளவிலா மகிழ்ச்சியில் இர்ஷாத் மூழ்கியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்