'உலக அளவில் 100 தமிழ் பேச்சாளர் மன்றங்கள்'

'உலக அளவில் 100 தமிழ் பேச்சாளர் மன்றங்கள்'

2 mins read
e5830818-71e4-4922-9162-78290de9f048
-
Google News Preferred Icon

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தின் 18வது பாரதியார் விழா இம்மாதம் 9ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடைபெற்றது. அதில் வரவேற்புரையாற்றிய தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தின் தலைவர் மு ஹரிகிருஷ்ணன் பாரதியின் 'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற கூற்றுக்கிணங்க 'டோஸ்ட்மாஸ் டர்ஸ் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பின் மூலம் உலகம் எங்கும் விரைவில் 100 தமிழ் பேச்சாளர் மன்றங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல நாடுகளிலும் தமிழ்மொழி பேச வாய்ப்பு உருவாக் கப்படும் என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழகத் தின் மேடைப்பேச்சாளர் சுகி சிவம், பாரதியாரின் சொல்லாட்சியையும் சொல்லாடல்களையும் நயம்பட எடுத்துக்கூறியதோடு அந்தக் காலத்திலேயே சமூக சிந்தனை யுடன் அனைவரும் சமம் என்று தைரியமாகக் குரல் கொடுத்த தையும் பாரதியாரின் வரிகள் மூலமாகவே நினைவுகூர்ந்தார்.

'அக்கினி குஞ்சொன்றைக் கண்டேன்' என்ற கவிதையை மாறுபட்ட கோணத்தில் விளக்கி பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்ததுடன் யசோதை, ஆண் டாள், ராதை ஆகியோரின் உணர் வுகளைக் 'காக்கை சிறகினிலே' கவிதையில் பாரதியார் வெளிப் படுத்தியதாகக் கூறினார் அவர். அரங்கம் நிறைந்த பார்வை யாளர்களைக் குறிப்பிட்டு, "சிங்கப் பூரில் தமிழ் என்றும் வாழும்," என்று பெருமிதத்துடன் கூறினார் திரு சுகி சிவம். சிறப்பு விருந்தினரான முனை வர் டி சந்துரு, "பாரதி மறைந்து 98 ஆண்டுகள் ஆனபோதும் அவரது பாடல்கள் சாகாவரம் பெற்றவை, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன," என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அங்க மாகச் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கே பரதன் இந்திய தொழில்முனைவோருக் கான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிரம்பி வழிந்த பார்வையாளர்கள் மத்தியில் பாரதியாரின் சொல்லாட்சி பற்றி சுவைபட உரையாற்றினார் தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர் சுகி சிவம். படம்: தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்.