சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய 'காப்பிய விழா'

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய 'காப்பிய விழா'

1 mins read
70891a8f-b55d-40b9-bf6e-bc163f49f570
-
Google News Preferred Icon

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 15ஆம் தேதி மாலை தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 5ம் தளத்தில் நடைபெற்ற 'காப்பிய விழா'வில் சிலப்ப திகாரத்தின் பெருமைகள் பேசப்பட்டதோடு, எதிர்காலத் தலைமுறையினருக்கு இந்தக் காப்பியத்தின் சிறப்புகளை உணர்த்த வேண்டியதன் அவ சியமும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திரு ஜோதி மாணிக்கவாசகம் தலை மைவகித்து உரையாற்றினார். காப்பியங்களின் பெருமை களைச் சொல்லிக் கொடுக்க தாத்தா, பாட்டி பெரும்பாலான வீடுகளில் இல்லாத நிலையில் அவர்களது அனுபவங்களையும் அறிவுரைகளையும் பெற இயலாத சூழல் காரணமாக பலரும் காப்பியங்களைக் கண்டுகொள் வதில்லை என்றார் அவர்.

பாண்டிய நெடுஞ்செழியனாக திரு கருணாகரசுவும் கவுந்தி அடிகளாக திருமதி லலிதா சுந்தரும் இளங்கோவடிகளாக திரு கோவிந்தராசுவும் சிலப்பதிகார பாத்திரங்களை ஏற்று அந்தப் பாத்திரங்கள் இன்றைய சூழ்நிலை யில் எவ்வாறு பாடியிருப்பார்கள் என்ற கற்பனையில் உதித்த தமது படைப்புகளைப் பாடல்களாகப் பாடினர். இயல், இசை, நாடகம் எனும் முப்பிரிவின்கீழ் கட்டுப்படும் சொற் கட்டு என சிலப்பதிகாரப் பாடல்கள் பற்றி விளக்கிய தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் முத்தையா, தன் இனிய குரலில் பல சிலப்பதிகாரப் பாடல்களைப் பக்கவாத்தியங்களு டன் பாடிக்காட்டினார்.

வளர்தமிழ் இயக்கத் தலைவர் ராஜாராமிடமிருந்து நினைவுப் பரிசைப் பெறும் முனைவர் ஓ. முத்தையா. அவர்களுடன் திரு ஜோதி மாணிக்கவாசகம் (இடக்கோடி), சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் ரெத்தின வேங்கடேசன். படம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்