மொழிபெயர்ப்புத் திறனை மேம்படுத்த புதிய ஆதரவு மானியம்

மொழிபெயர்ப்புத் திறனை மேம்படுத்த புதிய ஆதரவு மானியம்

1 mins read
1158d91d-790e-4995-92bb-110d8e546ff2
-

இர்ஷாத் முஹம்மது

தமிழ் மொழி, இலக்கியத்தில் பட்டக்கல்வியை மேற்கொள்ள தமிழ் முரசு நாளிதழின் விளம்பரப் பிரிவின் திரு ஜீவானந்தம் கருணாநிதிக்கு மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களிடையே மொழி- பெயர்ப்பு, உரைபெயர்ப்புத் திறன் களை வளர்க்க தேசிய மொழி பெயர்ப்புக் குழு அறிமுகப்படுத்தி யுள்ள புதிய இணை ஆதரவு மானியத்தை முதல் முறையாகப் பெற்ற ஏழு பேரில் தமிழ் முரசின் விளம்பரப் பிரிவில் 20 ஆண்டு- களுக்கும் மேலாகப் பணி புரிந்து வரும் 51 வயது திரு கருணாநிதியும் ஒருவர். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தாம் மேற்- கொள்ளவிருக்கும் இந்தப் படிப்பு, தமது வேலை சார்ந்த திறன்களை மேலும் மேம்படுத்த உதவும் என்று அவர் நம்புகிறார்.

ஆங்கிலத்தில் வரும் விளம்பர வாசகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பதும் அரசாங்கம், தனியார் துறைகளின் விளம்பர இயக்கங்களுக்கான தமிழ் வாச- கங் களைத் தயாரித்து வழங்கு வதும் திரு கருணாநிதியின் பணிகளில் அடங்கும். "தமிழ் மொழியால் என்ன பலன் என்று நினைத்து பள்ளிப் படிப்பின் தேவைகளுக் காக மட்- டுமே தமிழைப் படிப்பதோடு நின்று விடக்கூடாது. நமது தாய்மொழியை முறையாகக் கற்று அன்றாடம் பயன்படுத்தவேண்டும்," என்ற திரு கருணாநிதி, தமிழ் மொழி தமது வாழ்வில் பெரும் பங்காற்றும் என்று தமது இளம் வயதில் நினைக்கவில்லை என்றார்.

திரு ஜீவானந்தம் கருணாநிதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்