துயர்துடைப்பில் கடப்பாடு கொண்டுள்ள கருணாநிதி

துயர்துடைப்பில் கடப்பாடு கொண்டுள்ள கருணாநிதி

1 mins read
21b3f1a5-bf35-402a-8a87-60557a9fc868
-
Google News Preferred Icon

ப. பாலசுப்பிரமணியம்

உலகின் எந்த மூலையிலாவது பேரிடர் நிகழும்போது, பாதிக்கப்பட் டவர்களுக்கு நிவாரணப் பணி களை மேற்கொள்வதற்கான நன் கொடையைத் திரட்டுவதற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மும்முரமாக செயலில் இறங்கி விடும். அதே சமயம் பாதிக்கப்பட்ட இடத்திற்குத் துயர்துடைப்புக் குழு ஒன்றை அனுப்பி அங்கு நிலவ ரத்தை ஆராயவும் அது முற்படும். அக்குழுவில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் தொண்டூழியரான 59 வயது திரு லட்சுமணன் கருணாநிதி. கடந்த ஆண்டில் இலங்கையில் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 15,000 வீடுகள் பாதிப்படைய, அங்குள்ள 40,000 பேருக்கு படுப்பதற்கு பாய், படுக்கை விரிப்புகள் ஆகியவற் றைக் கொண்டு சேர்க்க உதவி னார் திரு கருணாநிதி. பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா போன்ற இடங்களிலும் அண்மைய ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர் கள் நிகழ்ந்தபோது, செய்யும் முழு நேர வேலையிலிருந்து சுமார் ஐந்து நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு அங்குள்ள நிலவரத்தை அறியச் சென்று வந்தார் திரு கருணாநிதி.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க விருது நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பாராட்டு விருது பெற்ற தொண்டூழியர் திரு லட்சுமணன் கருணாநிதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்