"வாசிக்கலாம், குடும்பத்துடன் வாங்க"

"வாசிக்கலாம், குடும்பத்துடன் வாங்க"

1 mins read

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையும் தேசிய நூலக வாரியமும் இணைந்து "வாசிக்கலாம் வாங்க" என்ற நிகழ்ச்சியை கடந்த மாதம் 24ஆம் தேதி விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகத்தில் நடத்தின. குடும்பத்துடன் நூலகத்திற்குச் சென்று தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு துணை இயக்குநர் திருமதி சாந்தி செல்லப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். தேசிய நூலக தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் திரு அழகிய பாண்டியன், நூலகத்தில் கிடைக்கும் வளங்களையும் வசதி களையும் பற்றி எடுத்துரைத்தார். சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழகப் பேராசிரியர் முனைவர் அனிதா தேவி பிள்ளை, முனைவர் சியா டி யோங் அலெக்ஸியஸ் ஆகியோர் வாசிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர். கேள்வி பதில் அங்கமும் இடம் பெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.