இந்திய முஸ்லிம் அமைப்புகள் பங்கேற்ற அஃப்லாக் ஸ்டார்ஸ் ஃபுட்சால் போட்டி

2 mins read
ef4c5315-5e83-4b32-9200-d958312a3392
கடந்த 15 ஆண்டுகளாக குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை மன்றம் காற்பந்துப் பயிற்சியை நடத்தி வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பயிற்சிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. - படங்கள்: ஷேக் அலாவுதீன்

புக்கிட் பாத்தோக் ‘ஹோம்டீம் என்எஸ்’ பொழுதுபோக்கு மன்றத்தில் சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்ற ‘அஃப்லாக் ஸ்டார்ஸ்’ ஃபுட்சால் காற்பந்துப் போட்டியில் கிட்டத்தட்ட 10 இந்திய முஸ்லிம் அமைப்புகள் கலந்துகொண்டன.

பதினேழு வயது முதல் 27 வயது வரை 100க்கும் மேற்பட்ட இளையர்கள் 12 அணிகளில் போட்டியிட்டனர்.
பதினேழு வயது முதல் 27 வயது வரை 100க்கும் மேற்பட்ட இளையர்கள் 12 அணிகளில் போட்டியிட்டனர். - படங்கள்: ஷேக் அலாவுதீன்

பதினேழு வயது முதல் 27 வயது வரை 100க்கும் மேற்பட்ட இளையர்கள் 12 அணிகளில் போட்டியிட்டனர்.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் ஆதரவுடன் அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி, கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் போட்டி நடைபெற்றது.

கடந்த 15 ஆண்டுகளாக குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை மன்றம் காற்பந்துப் பயிற்சியை நடத்தி வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பயிற்சிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இவ்வாண்டு முதல்முறையாக ஃபுட்சால் காற்பந்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக போட்டியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு ஷேக் அலாவுதீன் தெரிவித்தார்.

“நமது இளையர்கள் விளையாட்டை ஒரு தொழிலாக கூட கருத வேண்டும் விரும்புகிறோம்,” என்று பகிர்ந்தார் திரு ஷேக்.

ஃபுட்சால் காற்பந்துப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விளையாட்டாளர்களுடன் உரையாடினார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக்.
ஃபுட்சால் காற்பந்துப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விளையாட்டாளர்களுடன் உரையாடினார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக். - படங்கள்: ஷேக் அலாவுதீன்

ஃபுட்சால் காற்பந்துப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விளையாட்டாளர்களுடன் உரையாடினார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக்.

மன்றம் தொடங்கப்பட்டபோது அதன் இளையர் பிரிவை வழிநடத்திய நாள்களை நினைவுகூர்ந்த டாக்டர் ஹமீது, இந்திய முஸ்லிம் இளையர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் வாய்ப்புகளைப் பாராட்டினார்.

“இளையர்கள் நமது சமூகத்தின் எதிர்காலம். அவர்களை ஆதரிக்க நாம் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட இதுபோன்ற முயற்சிகள் அமைகின்றன,” என்று தமது உரையில் அவர் கூறினார்.

தனிப்பட்ட இளையர் அணிகள் உட்பட சிங்கப்பூர் பொதக்குடி சங்கம், சிங்கப்பூர் நாகூர் சங்கம், தமிழ் முஸ்லிம் ஜமாஅத், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம் ஆகிய இதர இந்திய முஸ்லிம் அமைப்புகளிலிருந்து அணிகள் திரண்டு வெற்றிக் கிண்ணங்களைத் தட்டிச் சென்றன.

போட்டிகள் முதன்முறையாக நடைபெற்றதால் ஒவ்வோர் அணியிலும் ஐந்து விளையாட்டாளர்கள் மட்டும் இருந்ததாக திரு ஷேக் கூறினார்.

“அடுத்த போட்டியில் இன்னும் அதிகமான விளையாட்டாளர்கள் எங்களுடன் இணைவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்