கண்ணனைக் கொண்டாடும் கலை நிகழ்ச்சி

கண்ணனைக் கொண்டாடும் கலை நிகழ்ச்சி

படம்: விழாக்குழு

08 Sep 2024 - 6:01 am

1 mins read

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றான பகவத் கீதை கூறும் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் 30 தனி அமைப்புகளின் கூட்டமைப்பான ‘கீதா ஜெயந்தி’ நடத்தும் ‘கிருஷ்ண மஞ்சரி’ எனும் கலை கலாசார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இசை, நடனம் உள்ளிட்ட அங்கங்களைக் கொண்ட இந்நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 13ஆம் தேதி பிஜிபி அரங்கில் நடைபெற உள்ளது.

மாலை 6.45 மணிக்குத் தொடங்கி இரு பகுதிகளாக நடைபெற உள்ள இந்நிகழ்வில் முதலில் நடன நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பஜனைப் பாடல்களும் இடம்பெறும்.

கண்ணனின் உற்ற நண்பரான குசேலரின் கதையைச் சொல்லும் மோகினியாட்ட நிகழ்ச்சியை 11 பெண் கலைஞர்கள் கொண்ட நடனக்குழு அரங்கேற்ற உள்ளது. தொடர்ந்து பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த நூலான ‘திருமந்திரம்’ கூறும் கருத்துகளை உள்ளடக்கிய பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

கண்ணனின் தோற்றம், அழகு, குழலின் இனிமை உள்ளிட்டவற்றை விவரிக்கும் ‘மதுராஷ்டகப்’ பாடல்களின் அடிப்படையில் ‘கதக்’ நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கண்ணன் - ராதையின் காதலைக் கொண்டாடும் பாடல்களுக்குச் சிறுவர்கள் நடனமாட உள்ளனர்.

இரண்டாம் பகுதியில் கண்ணன் பஜனைப் பாடல்கள் இடம்பெறும். பாடுபவர், புகழ்பெற்ற பாடகி டாக்டர் எஸ். செளமியா துணை இசை வழங்குவோர்.எம்பார் கண்ணன் வயலின், ஸ்ரீ பிரவீன் ஸ்பர்ஷ் மிருதங்கம், நிகழ்ச்சியில் ஆன்மிகம் தொடர்பான உள்ளூர்க் கலைஞர்களின் கலைப் படைப்புகளும் காட்சிப்படுத்தப்படும்.

நுழைவுச் சீட்டுகளைப் பெற www.gitajayanti.org.sg எனும் இணையத்தளத்தை நாடலாம். www.gitajayanti.org.sg

தொடர்புக்கு: 9389 0407.

குறிப்புச் சொற்கள்