புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த சிறுவர்களுக்கு விருதுகள்

புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த சிறுவர்களுக்கு விருதுகள்

2 mins read
ca18b1b2-ea13-4a46-af5b-12512d443ed6
புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த இளையர்களின் மனவுறுதியைப் பாராட்டி விருதுகள் வழங்கியது சிறார் புற்றுநோய் அறநிறுவனம். - படம்: சிறார் புற்றுநோய் அறநிறுவனம்

புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த இளையர்களின் மனவுறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்க சிறார் புற்றுநோய் அறநிறுவனம் விருதுகள் வழங்கி ஊக்கமளித்துள்ளது.

16ஆம் முறையாக நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில் 83 இளையர்கள் புற்றுநோய் சிகிச்சைக் காலத்தை வெற்றிகரமாகக் கடந்து, கல்விப் பயணத்தைத் தொடர்ந்ததை அங்கீகரிக்க விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டின் விருது நிகழ்ச்சி கடந்த மே மாதம் 23ஆம் தேதி உட்லண்ட்ஸ் ரிங் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி நிலையம் வரை பல நிலைகளில் பயின்ற 550 மாணவர்களுக்கு 2010ஆம் ஆண்டிலிருந்து சிறார் புற்றுநோய் அறநிறுவனம் இந்த விருதுகளின்வழி உதவிவந்துள்ளது.

இந்த விருதுகள் முக்கியமாக மாணவர்களுக்கு ஊக்கமளிக்கவும் நம்பிக்கையளிக்கவும் வழங்கப்படுவதாக அறநிறுவனம் குறிப்பிட்டது.

அத்துடன், இளையர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் புற்றுநோய்க்குப் பிறகும் அர்த்தமுள்ள, நிறைவான வாழ்வைச் சமூகத்தின் உதவியுடன் வாழமுடியும் என்பதை உணர்த்த முற்படுவதாகவும் அது தெரிவித்தது.

“புற்றுநோய் ஒரு குழந்தையின் கல்வியையும் தன்னம்பிக்கையையும் வெகுவாகப் பாதிக்கக்கூடியது,” என்று கூறினார் சிறார் புற்றுநோய் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ ஷுகாய்.

“ஆனால், குடும்பங்கள், பள்ளிகள், மருத்துவ நிபுணர்கள், ஆதரவாளர்கள் போன்றோரின் உதவியுடன் அவர்களால் தொடர்ந்து கற்கவும் முன்னேறவும் முடியும்,” என்றார் அவர்.

இந்த விருதுகள் அவர்களுக்குக் கூடுதல் உந்துதலை வழங்குவதற்காக எடுக்கப்படும் ஒரு முயற்சி என்று திரு கோ சுட்டினார்.

எந்தப் பிள்ளையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பிள்ளையும் விரும்புவதைச் சாதிக்கும் வாய்ப்பைப் பெற தகுதியுள்ளவர்கள் என்று எஸ்பிஎச் அறக்கட்டளையின் பொது நிர்வாகி பிரான்சிஸ் மா தெரிவித்தார்.

“இந்த விருதுகள் மீள்திறனையும் உறுதியையும் அங்கீகரிக்கின்றன. அத்துடன், சமூகத்தின் ஊக்கத்தாலும் ஆதரவாலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து கற்கவும், வளரவும், அர்த்தமுள்ள எதிர்காலத்தை எதிர்நோக்கவும் முடியும் என்பதற்காக அவை நினைவூட்டலாக இருக்கின்றன,” என்று திரு மா கூறினார்.

இந்த ஆண்டு விருது பெற்ற மாணவர்களில் அஷ்வின் குமாரும் ஒருவர்.

விக்டோரியா பள்ளியில் படித்துவரும் 15 வயது அஷ்வின், லிம்ஃபோமா (நிணநீர்ச்சுரப்பிப் புற்றுநோய்) நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது.

சிரமும் துன்பமும் நிறைந்த சிகிச்சைக் காலமாக இருந்தாலும் அவர் விடாமுயற்சியுடன் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப முற்பட்டார்.

மனத்துணிவையும் உறுதியையும் பாராட்டி அவருக்கு ‘பேக் டு ஸ்கூல் பெர்சவியரன்ஸ்’ விருது வழங்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சையைக் கடந்த சேவைகளின் மூலம் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவளிக்க அறநிறுவனம் முற்படுகிறது.

புற்றுநோயிலிருந்து மீண்டுவரும் பிள்ளைகளுக்கு உணர்வுபூர்வமான, உளவியல் சார்ந்த, சமூக ஆதரவு தேவை என்பதை இந்நிகழ்ச்சி பிறர்க்கு எடுத்துக்காட்ட முற்படுவதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், இத்தகைய பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் பராமரிப்பாளர்கள், குடும்பங்கள் ஆகியோரின் மனவுறுதியையும் இந்நிகழ்வு அங்கீகரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

எந்தவொரு குழந்தையும் தனித்துப் புற்றுநோயை எதிர்கொள்ளக் கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில்,

குறிப்புச் சொற்கள்
புற்றுநோய்இளையர்விருது