2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘தி புராஜெக்டர்’ மற்றும் செப்டம்பரில் ‘கேத்தே சினிபிளெக்ஸ்’ ஆகியவற்றின் வீழ்ச்சிக்குப் பிறகு, 2026ஆம் ஆண்டின் தொடக்கம் ஒரு வகையான மீட்சியை நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது.
வளர்ச்சியானது குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே காணப்பட்டாலும், அது ஒரு பொதுவான கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வீட்டிற்கு அருகிலேயே ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்குப் போதுமான திரையரங்குகள் உள்ளன. ஆனால், வித்தியாசமான அனுபவத்திற்காகச் சிங்கப்பூரர்கள் அதிக கட்டணம் செலுத்தவும் நீண்ட தூரம் பயணம் செய்யவும் தயாராக உள்ளனர்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசிய மூன்று முக்கிய நிறுவனங்களில் பெரிய நிறுவனமான ‘ஷா தியேட்டர்ஸ்’, அதன் 80 திரைங்குகளில் பாதியை அதன் உயர்தர லூமியர், ஐமேக்ஸ் அல்லது பிரீமியர் வடிவங்களாக மாற்ற இலக்கு வைத்துள்ளது. தனிப்பட்ட சூழலுக்கும் வசதிக்கும் கூடுதலாகப் பணம் கொடுக்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை அந்நிறுவனம் உணர்ந்துள்ளது.
ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள அதன் முதன்மை திரையரங்கான ‘ஷா லிடோ’வில் இருந்த ‘லிடோ 1’ அரங்கை பிப்ரவரி 12 முதல் ‘லூமியர் கிராண்ட் ஹால்’ ஆக மாற்றியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, கோல்டன் மைல் டவரில் உள்ள ‘ஃபிலிம்ஹவுஸ்’ உள்ளது. இது ‘தி புராஜெக்டர்’ இடத்தை எடுத்து பிப்ரவரி 3ஆம் தேதி திறக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு பழங்கால இடத்தில் தினசரி காட்சிகளை நடத்துகிறது. சொந்தமாக உணவகம் மற்றும் சமையலறையை நிர்வகிப்பது போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்த்து, திரைப்பட விரும்பிகளை ஈர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த இது திட்டமிட்டுள்ளது.
மற்ற இரண்டு நிறுவனங்களைப் போலல்லாமல், ‘கெப்பிட்டோல் தியேட்டர்’ பிப்ரவரி 22ஆம் தேதி முதல் அதன் அட்டவணையைத் தொடங்கும்போது நாள்தோறும் காட்சிகளை நடத்தாது. உண்மையில், காட்சிகள் வேண்டுமென்றே குறைவாகவே நடத்தப்படும், இதன் மூலம் ஒவ்வொரு காட்சியும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக மாறும். 2030ஆம் ஆண்டில் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள இந்த அரண்மனை போன்ற திரையரங்கின் பிரம்மாண்டம் இதற்குத் துணையாக இருக்கும்.
திரையரங்குகள் வெறும் நட்சத்திரங்களையோ கதையையோ அல்லது காட்சிகளையோ விற்பனை செய்வதற்காக மட்டும் இல்லை என்பதை இந்த மூன்று நிறுவனங்களும் அங்கீகரிக்கின்றன. நுகர்வோர் அவற்றை வீட்டிலுள்ள பெரிய திரைக் தொலைக்காட்சிகளிலோ அல்லது எம்ஆர்டியில் பயணம் செய்யும்போது தங்களது கைப்பேசிகளிலோ பார்த்துக்கொள்கிறார்கள்.
‘அனுபவம்’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரர்கள் வெறும் திரைப்படங்களை மட்டும் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கும் அந்த முழுமையான அனுபவத்தை விரும்புகிறார்கள். ஷா, ஃபிலிம்ஹவுஸ் மற்றும் கெப்பிட்டோல் ஆகிய மூன்றும் அந்த அனுபவத்தைத் தங்களது சொந்த வழியில் வழங்க முயல்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
கேத்தே சினிபிளெக்ஸ் வெளியேறியதைத் தொடர்ந்து, அதன் மீதமுள்ள நான்கு கிளைகளைப் பல நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளன.

