மகாபாரதத்தின் மறுவடிவாக்கமான ‘பிளைண்ட்ஃபோல்டெட்’

மகாபாரதத்தின் மறுவடிவாக்கமான ‘பிளைண்ட்ஃபோல்டெட்’

1 mins read
d60221de-7523-4dda-a495-259ba8ecf521
மகாபாரதக் கதையில் இடம்பெறும் காந்தாரி அரசியின் கதை கரு கொண்டு மேடையேறவுள்ளது ‘பிளைன்ஃபோல்டெட்’. - படம்: ஏற்பாட்டாளர்

இந்த ஆண்டின் அனைத்துலக நடன தினத்தை முன்னிட்டு இந்திய இதிகாசமான மகாபாரதத்தை மறுவடிவாக்கம் செய்த நிகழ்ச்சி ஒன்று மேடையேறவுள்ளது.

மலாய்த் தற்காப்புக் கலையான சீலாட்டையும் இந்தியாவின் சிலம்பத்தையும் உள்ளடக்கிய நாடகம், நடனத்தின் ஒரு கலவையாக இடம்பெறவுள்ளது ‘பிளைண்ட்ஃபோல்டெட்’ எனும் அந்த நிகழ்ச்சி.

மகாபாரதக் கதையை அரசி காந்தாரியின் ‘கண்களின்’ வழியாக நிகழ்ச்சி மறுவடிவாக்கம் செய்கிறது.

தனது புதல்வர்களான கௌரவர்களுக்கும் அவர்களின் பாண்டவச் சகோதரர்களுக்கும் இடையே போர் மூளும் தறுவாயில், தனது மனசாட்சி, பொறாமை, கடமை, குருட்டு விசுவாசம் குறித்த உண்மைகளைக் காந்தாரி எதிர்கொள்வதே நிகழ்ச்சியின் கரு.

ஒருவரின் அன்றாட வாழ்விற்கும் பொருந்தக்கூடிய வகையில் மனிதர்களின் தேர்வுகள், தர்மம், போரின் கோர விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிய காலங்கடந்த ஒரு சிந்தனையாக இது அமையவுள்ளது.

பிப்ரவரி 28ஆம் தேதி விக்டோரியா அரங்கத்தில் நிகழ்ச்சி இடம்பெறும். சிங்கப்பூரர்கள் தங்களின் எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையைப் பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.

மேல்விவரங்களுக்கு https://cp.bookmyshow.sg/en/events/international-dance-day-idd-festival-2026-blindfolded-a-reimagining-of-the-great-indian-epic-mahabharata/SRIMAHA9 இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்