சொல்லாடும் முன்றிலின் சிறார் போட்டி

சொல்லாடும் முன்றிலின் சிறார் போட்டி

1 mins read
a6337bf9-5656-458c-b451-68eff369b9dc
சொல்லாடும் முன்றில் அமைப்பின் மூன்றாவது ஆண்டுவிழா 2026 செப்டம்பர் 20ஆம் நாளன்று நடைபெறும். - படம்: சொல்லாடும் முன்றில்
Google News Preferred Icon

மாணவர்களிடையே தமிழ்மொழி, வாசிப்பு, படைப்பாற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில், சொல்லாடும் முன்றில் அமைப்பு தனது மூன்றாவது ஆண்டுவிழாவை ஒட்டி சிறார் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

போட்டிக்கான தலைப்பு: “மாணவர்களாகிய நீங்கள் தமிழ் நிகழ்வுகளுக்குச் செல்வதற்கான காரணம் என்ன?”

பத்து வயதிற்கு உட்பட்டோர், போட்டியின் தலைப்பு குறித்த தங்களது கருத்தைக் காணொளியாகப் பதிவுசெய்து அனுப்ப வேண்டும். பத்து வயதிற்கு மேற்பட்டோர், 80 முதல் 100 சொற்களுக்குள் கைப்பட எழுதி, அதனைத் தெளிவாகப் படமெடுத்து, மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் வழியாக அனுப்பலாம்.

தங்களது பெயர், பிறந்த தேதி, பள்ளியின் பெயர், வகுப்பு ஆகியவற்றையும் அவர்கள் குறிப்பிட வேண்டும். அத்துடன், அவர்கள் தங்களது நிழற்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

செப்டம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணிக்குள் படைப்புகள் வந்துசேர வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி - sollaadummuntril@gmail.com, வாட்ஸ்அப் எண் - 8237 7006.

போட்டிகளில் வெற்றுபெறும் சிறார் ஐவர்க்கு செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறும் ஆண்டுவிழா நிகழ்வின்போது பரிசுகள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சிறார்போட்டிதமிழ் மொழி