பிள்ளைகளின் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டை நிர்வகிக்கும் சமூகம்

பிள்ளைகளின் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டை நிர்வகிக்கும் சமூகம்

2 mins read
84290a1b-6ebb-4c19-824a-aa078eeb736b
நீண்ட நேரம் பிள்ளைகளின் முழு கவனத்தை ஈர்க்க மின்னிலக்க சாதனங்கள் சில பெற்றோருக்கு பெரும் உதவியாக இருக்கலாம்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அதிகரித்து வரும் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டின் கவலையைத் தொடர்ந்து ஜனவரி 21ஆம் தேதி சுகாதார அமைச்சு கடும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.  பிள்ளைகளின் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டை சரிவர நிர்வகிப்பதற்கு பெற்றோர் தற்போது சில வழிகளைக் கையாள்வது அவசியம். மின்னிலக்க சாதனங்களைப் பயன்படுத்தும் நேரத்தை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதை ஆராய்கிறது தமிழ் முரசு. 

மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டை வெகுமதியாக அளித்தல்

வீட்டுப்பாடம் முடித்தால், விளையாட்டுப் பொம்மைகளை ஒழுங்காக அடுக்கி வைத்தால் சிறிது நேரம் மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்று பெற்றோர் பிள்ளைகளை ஊக்கமூட்டலாம். இதைச் செய்தால் அதைப் பெறலாம் என்ற நம்பகத்தனமான ஒரு வெகுமதி அமைப்பு பிள்ளைகளுக்கு மிக முக்கியம். 

“இந்த அமைப்பைச் செயல்படுத்துவதன் மூலம் பிள்ளைகளின் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டை பெற்றோர்கள் சரிவர நிர்வகிக்கலாம்.

“இதன் வழியாக செயலியினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கலாம்,” என்றார் ஆசிரியர் மதன் செல்வம்

அதிக மின்னிலக்கம் இல்லா விளையாட்டு 

நீண்ட நேரம் பிள்ளைகளின் முழு கவனத்தை ஈர்க்க மின்னிலக்க சாதனங்கள் சில பெற்றோருக்கு பெரும் உதவியாக இருக்கலாம். மின்னிலக்க சாதனங்கள் கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் பெற்றோர்கள், பிள்ளைகளின் கவனத்தைப் பெற வேறு சில வழிகளைக் கையாள வேண்டும். இதற்கு விளையாட்டுகள் ஒரு சிறந்த வழியாகும். “பலகை விளையாட்டுகள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றால் பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்பலாம். அதுமட்டுமன்றி, எளிதான வீட்டு வேலைகளுக்கு பெற்றோர் பிள்ளைகளின் உதவியைக் கூட நாடலாம். 

“சமைப்பது, கேக் வகைகள் செய்வது போன்ற நடவடிக்கைகளில் பிள்ளைகள் ஈடுபடுவதால் மின்னிலக்க சாதனங்களை சில மணி நேரத்துக்கு ஒதுக்கி வைக்கலாம். 

“மேலும், அவர்கள் விரும்பும் நடவடிக்கைகள் - வண்ணம் தீட்டுவது, புத்தகம் படிப்பது - போன்றவற்றில் பெற்றோர்களும் ஈடுபடுவதால் மின்னிலக்க சாதனங்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும். குடும்ப பிணைப்பும் வலுவடையும்,” என்றார் பெற்றோர் சந்திரன் கிருஷ்ணன்.  

மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டைத் தவிர்ப்பது சிரமம் 

“பிள்ளைகளிடமிருந்து மின்னிலக்க சாதனங்களை முற்றிலும் முறியடிப்பது எளிதான செயல் அல்ல.

“8 மாத குழந்தைக்குத் தாயான அவர் தினமும் தன் மகனுக்கு 1 மணி நேர தொலைக்காட்சி நேரத்தை காலை 30 நிமிடங்களுக்கும் மாலை 30 நிமிடங்களுக்கும் ஒதுக்குவார். 

“பிறந்த குழந்தைகளுக்கு தொலைக்காட்சி அல்லது திறன்பேசிகள் மூலம் காணொளிகள் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் 4 மாதங்களுக்கு மேல் குழந்தைகளை ஈடுபடுத்துவது அவசியம்,” என்றார் தாயார் ஜானகி தேவி. 

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ள திருமதி ஜானகி பல நேரங்களில் வீட்டுக்கு களைப்புடன் திரும்புவதுண்டு. 

“குழந்தைகளுக்கு கிடைக்கும் மின்னிலக்க சாதன பயன்பாட்டினால் என்னைப் போன்ற பெற்றோர்களுக்கும் சிறிதளவு ஓய்வு கிடைக்கும். 

“வளரும் பிள்ளைகளை தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். இந்த நவீன உலகில் சிறிதளவு மின்னிலக்க சாதனப் பயன்பாட்டில் தவறில்லை. 

“பிள்ளைகள் மின்னிலக்க சாதனங்களில் என்னென்ன உள்ளடக்கத்தைக் காண்கிறார்கள், கேட்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் சரிபார்க்க வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார் ஜானகி. 

குறிப்புச் சொற்கள்
சுகாதார அமைச்சுபெற்றோர்மின்னிலக்கம்