ஈசூன் மஹா மாரியம்மன் கோயிலில் பட்டிமன்றம்

ஈசூன் மஹா மாரியம்மன் கோயிலில் பட்டிமன்றம்

1 mins read
087580c2-72e6-4c1c-9339-9ed2feca6c67
2026 ஜூன் 18ல் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது. - படம்: சுந்தர நடராஜ்

ஈசூன் மஹா மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கை அடுத்து நடைபெறும் மண்டலாபிஷேக நிகழ்ச்சிகளில் ஒன்றாக, ஜூலை 22ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் பட்டிமன்றம் கோயில் வளாகத்தில்  நடைபெறும்.

‘தர்மம் செய்வதில் தாராளமானவர்கள் ஆண்களா? பெண்களா?’  என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் ஆண்களே என்ற அணியில் திரு ராம்குமார் சந்தானம், திரு மா.அர்ச்சுனன், செல்வி மோகன் ஹரிவர்த்னி ஆகியோரும் பெண்களே என்ற அணியில் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன், திருமதி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன், செல்வன் ரகுநந்தன் ஆகியோரும் வாதிடுவர். திரு யூசுப் ராவுத்தர் ரஜித் நடுவர் பொறுப்பேற்கிறார்.

அனுமதி இலவசம்.

மேல் விவரங்களுக்குத் திரு ரஜித்தை 9001 6400  என்ற எண்ணில் அணுகலாம்.

குறிப்புச் சொற்கள்