சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 144வது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெறவுள்ளது.
பிற்பகல் 4 மணிக்கு, தேசிய நூலகத்தின் 5ஆம் தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
உள்ளூர்ப் படைப்புகளைப்பற்றி நடைபெறும் நூல் கலந்துரையாடல் அங்கத்தில் எழுத்தாளர் எம்.கே. குமார் அவர்களின், ‘5.12 பி.எம்.’ எனும் சிறுகதைத் தொகுப்பு இடம்பெறவுள்ளது.
இந்நூலைத் திருவாட்டி இசக்கி செல்வி அறிமுகம் செய்வார். திரு. தமிழ் ஐயப்பன், திரு. மா.வைத்தீஸ்வரன் இருவரும் நூலாசிரியருடன் கலந்துரையாடலில் பங்கேற்பர்.
‘இதயத்தில் நின்றவை’ அங்கத்தில் வாசகர்கள் தங்கள் மனத்தில் நிலைத்திருக்கும் புனைவுகள் குறித்து உரையாற்றுவர்.
மேலும், கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினர் சாய் பாலாஜி லட்சுமணன் நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் மா. அன்பழகன், ஜே எம் சாலி ஆகியோரது படைப்புகள் இடம்பெற்றன.
ஆகஸ்ட் மாதப் போட்டிகள்
நூல் அறிமுகப் போட்டிக்குச் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்
உயர்நிலைப்பள்ளி மாணவர் பிரிவு: 200-300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
தொடக்க வரி: ‘என்னை மறந்துவிட்டாயா என்று கேட்டது யாருடைய குரல்?’ என் உடல் நடுங்கியது.
இளையர் பிரிவு: 300-400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
தொடக்க வரி: ‘காவலர்களிடம் பிடிபட்டால் அவ்வளவுதான்,’ என் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்தினேன்.
பொதுப்பிரிவு: 400-500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
தொடக்க வரி: கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கிச் சுழல, அவரது வயது குறையத் தொடங்கியது.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 24.07.2026 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16
அழைப்புக்கு, திருவாட்டி மணிமாலா மதியழகன் - 8725 8701/திருவாட்டி பிரேமா மகாலிங்கம் - 9169 6996.

