கடந்த 18ஆம் தேதி காலமான இஸ்லாமிய சமய அறிஞரும் நாவலருமான மௌலவி அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது நூரி ஹழ்ரத்தின் மறுமை நல்வாழ்விற்காக, சனிக்கிழமை (நவம்பர் 28) சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெறவுள்ளது.
டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் அன்று மாலை ஹனபி அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் இந்நிகழ்வில், புனித அல்குர்ஆன் கத்தம், அர்வாஹ் ஃபாத்திஹா ஓதப்படவுள்ளது.
சிங்கப்பூர் முஸ்லிம்கள் பலரை உம்ரா, ஹஜ்ஜுப் பயணங்களில் வழிநடத்தியவரான அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது, தமது சமய சொற்பொழிவுகளால் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். சமயப் பணிகளாலும் நல்ல போதனைகளாலும் சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்திற்குப் பங்களித்தவரின் துஆ மஜ்லிஸில் கலந்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.
