தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘புரொஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை நன்கொடை

1 mins read
fa27d252-eb1d-47e4-bf03-6ab3e49c63c4
சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை இணை அமைப்பினர், ஆதரவாளர்கள் நன்கொடை வழங்கினர். - படம், செய்தி: சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை அமைப்பு சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளது.

இந்திய மரபுடைமை நிலைய வளாகத்தில் கடந்த 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி இரா.அன்பரசுவிடம் நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த முயற்சிக்கு சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், முஸ்லிம் லீக் சிங்கப்பூர், நாகப்பட்டினம் சங்கம், பொதக்குடி சங்கம், தோப்புத்துறை முஸ்லிம் சங்கம், தக்கலை முஸ்லிம் சங்கம், சலாம் அமைப்பு , நாகூர் சங்கம், அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி மற்றும் கலாசார சங்கம் , கட்டிமேடு ஆதிரெங்கம் சங்கம், திருவிதாங்கோடு முஸ்லிம் யூனியன், எஸ்.எச். முஹம்மது முஸ்தபா, ஆடிட்டர் அசன் மசூது, நைனா முகம்மது அன் சன்ஸ், வி.எஸ்.என். காதர் அலி, பாவா டெலிக்கசி ஆகியோர் ஆதரவு அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்