‘இசைமுரசு’ நாகூர் ஹனிஃபாவின் நூற்றாண்டு விழா

1 mins read
14844d44-2233-424e-8bef-2fd0d0814187
உரத்த குரலுக்குச் சொந்தக்காரரான பாடகரும் பாடலாசிரியருமான நாகூர் ஹனிஃபா. - படம்: ஏற்பாட்டுக் குழு

பிரபல பாடகரான ‘இசைமுரசு’ நாகூர் இ.எம்.ஹனிஃபாவின் நூற்றாண்டு விழா டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ள இவ்விழா, 30A கிரேத்தா ஆயர் சாலையில் உள்ள கிரேத்தா ஆயர் மக்கள் அரங்கத்தில் அன்று மாலை 4.45 மணிக்குத் தொடங்குகிறது.

செவிக்கு விருந்தாகும் வகையில் கலைமாமணி இசையரசு இறையன்பன் குத்தூஸ், ‘சூப்பர் சிங்கர்’ தொலைக்காட்சிப் புகழ் பரீதா, தீன் இசைக்குயில் ரஹிமா ஆகியோர் படைக்கும் இன்னிசை நிகழ்ச்சியும் இதில் இடம்பெறவுள்ளது.

$30, $40, $50 என மூன்று பிரிவுகளில் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. நுழைவுச்சீட்டுகளைப் பெற சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஏற்பாட்டுக் குழுவினரைத் தொடர்புகொள்ளலாம்.

டெல்ஹவ்சி லேனில் உள்ள பரக்கத் உணவகத்திலும் நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.

நுழைவுச்சீட்டுகளுக்கான தொடர்பு எண்கள்:

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்: 9795 8142 திருவாட்டி ரஹிமா: 8821 3576

குறிப்புச் சொற்கள்