காப்பிய விழா 2024: காப்பியப் பாத்திரங்கள் காட்டும் அவலம்

காப்பிய விழா 2024: காப்பியப் பாத்திரங்கள் காட்டும் அவலம்

1 mins read
93fe7423-15f4-4204-b74d-fa083e49da3b
கடந்த ஆண்டுக்கான இளங்கோவடிகள் விருது திரு ந.வீ. சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்டது. - கோப்புப்படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் காப்பிய விழா, செப்டம்பர் 29ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.45 மணிக்கு நேரடி நிகழ்வாக நடைபெறவுள்ளது.

விக்டோரியா சாலையில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் 16வது மாடியில் உள்ள ‘த போட்’ (POD) இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு சிந்திக்கவிருக்கும் காப்பியம் வளையாபதி. சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா தினகரன், புதுச்சேரி  அரசு கலைமாமணி, தமிழ்மாமணி போன்ற பல விருதுகளைப் பெற்றவரும் காப்பியக் கவிதைகள் பலவற்றைத் தந்தவரும் இராமானுஜர் காப்பியத்திற்குத் தமிழக அரசு விருது பெற்ற கவிஞருமான உசேன் தலைமையில்  ‘காப்பியப் பாத்திரங்கள் காட்டும்  அவலம்’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.

அத்துடன் மாணவப் பேச்சாளர்கள் பங்கெடுக்கும் கருத்தரங்கமும் நிகழ்வுறும். நிகழ்வில் நாட்டியம், நோக்கவுரை, அறிமுகவுரை மற்றும் கவிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பெறும் காப்பிய விருதான இளங்கோவடிகள் விருது வழங்குதலும் உண்டு.

குறிப்புச் சொற்கள்