சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 141ஆவது கதைக்களம் நிகழ்ச்சி, மார்ச் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறவுள்ளது.
உள்ளூர்ப் படைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள நடைபெறும் நூல் கலந்துரையாடல் அங்கத்தில், திருவாட்டி பாத்திமா ரிஸ்வானா, எழுத்தாளர் பீரம்மாள் பீர் முகம்மதின் ‘வேத வாக்கு’ நூலைப் பற்றிய அறிமுகத்தை வழங்குவார்.
மேலும், அன்றைய நிகழ்ச்சியில் ‘தங்கமுனை விருது 2025’ விருதாளர்கள் சிறப்பிக்கப்படவுள்ளனர்.
இவற்றுடன், கதைக்களத்திற்கு வந்திருந்த போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறும். வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். மாணவி மீரா ஜெய்குமார் நெறியாள்கை செய்யவுள்ளார்.
மே மாதப் போட்டிகள்
நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் அறிமுகத்தை நயம்பட எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு நூல் அறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்
உயர்நிலைப்பள்ளி மாணவர் பிரிவு: 200-300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
“எந்தப் பக்கம் திரும்பினாலும் தமிழ்... தமிழ்... எப்பதான் இந்த மாதம் முடியுமோ?” என்ற முணுமுணுப்புக் கேட்டுத் திரும்பினேன்.
இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
எனக்காகச் சிரத்தையுடன் அவன்/அவள் செய்த அனைத்தும் அன்று எனக்கு கோமாளித்தனமாகவே தோன்றியது.
பொதுப் பிரிவு: 400-500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை என்பதை நான் உணர்ந்த நாளை என்னால் மறக்க முடியுமா?
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 24.04.2026 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16
மேல்விவரங்களுக்கு திருவாட்டி மணிமாலா மதியழகன் - 8725 8701/ திருவாட்டி பிரேமா மகாலிங்கம் - 9169 6996

