சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான சட்டக் கூறுகள்

சட்டம், நமக்காக!

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான சட்டக் கூறுகள்

படம்: ஹானா லா ஃபர்ம்ஸ்

08 Jun 2026 - 11:43 am

1 mins read

சிங்கப்பூரில் சிறிய, நடுத்தர நிறுவனங்களை நடத்துவோர் அல்லது நடத்த விரும்புவோர் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களை எளிமையாக விவரிக்கிறது ‘சட்டம், நமக்காக!’ தொடரின் அடுத்த பாகம்.

இந்த வாரம் அதுபற்றிப் பேசுகிறார் வழக்கறிஞர் ரமே‌ஷ் செல்வராஜ். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் குறித்த விவகாரங்களைப் பற்றி அவர் விளக்குகிறார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களை நடத்துவோர் அல்லது அதற்காகத் திட்டமிடுவோர் என்னென்ன செய்யவேண்டும், அவர்கள் எத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பன பற்றி திரு ரமே‌ஷ் விவரிக்கிறார்.

சட்டங்களை அனைவர்க்கும் எளிதில் புரியவைக்கும் முயற்சிதான் ‘சட்டம், நமக்காக!’ காணொளித் தொடர். இது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தமிழ் முரசின் இணையத்தளம், செயலி, சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக வெளியிடப்படுகிறது.

முதல் பாகம் மே 9ஆம் தேதி வெளியானது. திரு ரமே‌ஷ் இடம்பெறும் ஐந்தாவது பாகம் இவ்வாரம் சனிக்கிழமை (ஜூன் 6) வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சட்டம்நிறுவனம்வர்த்தகம்வழக்கறிஞர்