‘சட்டம், நமக்காக!’: இறுதிப் பாகம்

‘சட்டம், நமக்காக!’: இறுதிப் பாகம்

1 mins read
f517328a-e1b6-4440-b528-9f70b637dd61
சட்டங்களைப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ள வகைசெய்வது ‘சட்டம், நமக்காக’ தொடரின் இலக்கு. - படம்: ஹானா லா ஃபர்ம்ஸ்
Google News Preferred Icon

வெளிநாடுகளில் சொத்து வாங்க விரும்புவோருக்குச் சட்டரீதியான சில முக்கிய அம்சங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு.

வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்கு முன்பு கருத்தில்கொள்ளவேண்டிய முக்கியத் தகவல்கள், எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை விவரிக்கிறது ‘சட்டம், நமக்காக!’ காணொளித் தொடரின் ஆறாம் பாகம். இதில் வழக்கறிஞர் செந்தில் தயாளன் முக்கியத் தகவல்களை எடுத்துச் சொல்கிறார்.

வெளிநாட்டுச் சொத்துகள் தொடர்பான விளம்பரங்களையும் தாண்டிப் பலரும் அறியாத சில விவரங்களை எளிய மொழியில் திரு செந்தில் விளக்குகிறார்.

சட்டங்களை அனைவருக்கும் எளிதில் புரியவைக்கும் முயற்சிதான் ‘சட்டம், நமக்காக!’ காணொளித் தொடர். இது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தமிழ் முரசின் இணையத்தளம், செயலி, சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக வெளியிடப்படுகிறது.

முதல் பாகம் மே 9ஆம் தேதி வெளியானது. திரு செந்தில் இடம்பெறும் இறுதிப் பாகம் இவ்வாரம் சனிக்கிழமை (ஜூன் 13) வெளியானது.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சட்டம்வழக்கறிஞர்வெளிநாடு