சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள், அவர்களின் உரிமைகள் ஆகியவற்றை விவரிக்கிறது ‘சட்டம், நமக்காக!’ தொடரின் அடுத்த பாகம்.
இந்த வாரம் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான அம்சங்களை வழக்கறிஞர் ராஜன் சுப்ரமணியம் விவரிக்கிறார். வெளிநாட்டு ஊழியர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சங்களைப் பற்றி திரு ராஜன் பேசுகிறார்.
வேலையில் பிரச்சினைகளைச் சந்தித்தால் ஊழியர்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதையும் அவர் எளிமையாக எடுத்துச் சொல்கிறார்.
சட்டங்களை நம் அனைவருக்கும் எளிதில் புரியவைக்கும் முயற்சிதான் ‘சட்டம், நமக்காக!’ காணொளித் தொடர். இதில் இடம்பெறும் பாகங்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தமிழ் முரசின் இணையத்தளம், செயலி, சமூக ஊடகப் பக்கங்கள் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுவருகிறது.
முதல் பாகம் இம்மாதம் ஒன்பதாம் தேதி வெளியானது.
திரு ராஜன் இடம்பெறும் நான்காவது பாகம் இவ்வாரம் சனிக்கிழமை (மே 30) வெளியானது.

