‘சட்டம், நமக்காக!’: மணவிலக்குச் சட்டங்கள்

‘சட்டம், நமக்காக!’: மணவிலக்குச் சட்டங்கள்

சட்டங்களை எளிமையாக விவரிக்கும் புதிய காணொளித் தொடர்
படம்: ஹானா லா ஃபர்ம்ஸ்

24 May 2026 - 6:53 am

1 mins read

பொதுவாக, சட்டம் என்றாலே நம்மில் பலருக்கு அதிகம் புரியாமல் இருக்கக்கூடும்.

அதேவேளை, பொதுமக்கள் சட்டங்களை நன்கு அறிந்திருப்பதும் முக்கியம்.

அப்படியிருக்கையில், சட்டங்களை நம் அனைவருக்கும் எளிதில் புரியவைக்கும் முயற்சிதான் தமிழ் முரசின் ‘சட்டம், நமக்காக!’ காணொளித் தொடர். இத்தொடரின் மூன்றாவது பாகத்தில் விவாகரத்து தொடர்பான அம்சங்களை விவரிக்கிறார் வழக்கறிஞர் ஆதவன் ஜெயபால்.

மணவிலக்கு நடைமுறைகளின்போது தம்பதியர் கருத்தில்கொள்ளவேண்டிய தகவல்கள், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள், அவர்களின் பிள்ளைகள் எப்படி பாதிக்கப்படக்கூடும் போன்ற விவரங்களை திரு ஆதவன் தெரிவிக்கிறார். இதன் தொடர்பில் சிங்கப்பூர் சட்டங்கள் எவ்வாறு வரையப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர் எளிமையாக எடுத்துச் சொல்கிறார்.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ‘சட்டம், நமக்காக!’ தொடரின் புதிய பாகம் வெளியிடப்படுகிறது. வழக்கறிஞர் ஆதவன் இடம்பெறும் பாகம் இவ்வாரம் வெளியாகிறது.

‘சட்டம், நமக்காக!’ தொடரைத் தமிழ் முரசின் இணையத்தளம், செயலி, சமூக ஊடகப் பக்கங்களில் பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்வழக்கறிஞர்சட்டம்விவாகரத்துமணவிலக்குபிள்ளைதம்பதிநீதிமன்றம்