சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 142வது கதைக்களம் நிகழ்ச்சி மே 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்குத் தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில் அண்மையில் காலமான எழுத்தாளர் புதுமைத்தேனீ மா. அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நூல் அறிமுகம் இடம்பெறும்.
‘இதயத்தில் நின்றவை’ அங்கத்தில் வாசகர்கள் தங்கள் மனத்தில் நிலைத்திருக்கும் புனைவு குறித்துப் பகிர்ந்துகொள்வர்.
கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப்பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
ஜூன் மாதப் போட்டிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னிலக்கப் படிவத்தின் வழியாக மே 22ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16, மணிமாலா மதியழகன் - 8725 8701, பிரேமா மகாலிங்கம் - 9169 6996

