சிங்கப்பூர் படைப்பாளர் மில்லத் அகமதின் ‘மீலாதுன் நபி’ ஆவணத் திரைப்படத்தின் பாடல்களைப் பிரபல இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சென்னையில் வெளியிட்டுள்ளார்.
ஒரே ஓர் இசைக்கருவியை மட்டும் வைத்து பாடல்கள் அமைக்கப்பட்டதாகப் பகிர்ந்துகொண்டார் ஆவணத் திரைப்படத்திற்கு இசையமைத்த திரு எஸ்.ஆர். ராம்.
தமிழ் ஆவணத் திரைப்படத்தில் ஆங்கிலப் பாடல் உட்பட மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு அனுபவத்தைத் தரும் வகையிலும் ஒவ்வொரு விதமான கதையைச் சொல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன என்று திரு எஸ்.ஆர். ராம் பகிர்ந்துகொண்டார்.
‘மீலாதுன் நபி’ ஆவணத் திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ஜீ6 மூவிஸ் (zee6 movies) யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படும்.
ஆவணத் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு கண்டது.

