மில்லத் அகமதிற்குக் ‘கலைக்கோ மாமணி’ விருது

மில்லத் அகமதிற்குக் ‘கலைக்கோ மாமணி’ விருது

1 mins read
0eb45ed6-cd02-48da-a3d5-71a6390899b6
மில்லத் அகமதிற்கு (இடமிருந்து நான்காமவர்) காரைக்கால் மாவட்டக் கலைஞர்கள் மாமன்றத்தின் சார்பில் ‘கலைக்கோ மாமணி’ விருது வழங்கப்பட்டது. - படம்: மில்லத் அகமது

இயக்குநர் மில்லத் அகமது இயக்கிய ‘மீலாதுன் நபி’ ஆவணப்படத்தின் காட்சிகள் சில, காரைக்கால் நிஜாம் மகாலில் திரையிடப்பட்டுள்ளன.

ஜூலை 14ஆம் தேதி நடந்த இந்நிகழ்ச்சியில், திரு மில்லத் அகமதிற்குக் காரைக்கால் மாவட்டக் கலைஞர்கள் மாமன்றத்தின் சார்பில் ‘கலைக்கோ மாமணி’ விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், திருவாட்டி அமுதா ஆறுமுகம், பேராசிரியர் சா. நசீமா பானு, திரு இளமுருகு, திரு அப்துல் நசீர் ஆகியோர் உரையாற்றினர். 

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு மணி நேர ஆவணப்படம், நிகழ்ச்சியின்போது பாராட்டப்பட்டது.

அய்யம்பேட்டையைத் தொடர்ந்து காரைக்காலில் இத்திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

கலைஞர்கள் மாமன்றத் தலைவர் தங்கவேலு, டாக்டர் ஹாஜா பாரூக், திரு எஸ்.எம். ஆரிஃப் மரைக்காயர், முனைவர் அசோக் குமார், திரு அமீர் ஜவஹர் உள்ளிட்ட உள்ளூர்ப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்