தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தேசிய தினச் சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தேசிய தினச் சிறப்புப் பட்டிமன்றம்

1 mins read
06b05a80-aaf6-4f66-a5a0-fd70369a6985
நாட்டின் 61வது தேசிய தினத்தை ஒட்டி, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 131வது நிகழ்ச்சியாக இந்தப் பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - படம்: ஏற்பாட்டாளர்கள்

பெக்கியோ சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழுவும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து சிறப்புப் பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.

சனிக்கிழமை (செப்டம்பர் 12) மாலை, எண் 21கிளௌசெஸ்டர் ரோட்டில் (Gloucester Rd) அமைந்துள்ள பெக்கியோ சமூக மன்றத்தின் இரண்டாம் தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

‘60 ஆண்டுகள் சாதனை படைத்த சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் தேவை புதுமைச் சிந்தனையா? பாரம்பரிய விழுமியங்களா?’ என்ற தலைப்பில் விவாதிக்கும் இந்தப் பட்டிமன்றத்தின் நடுவராகத் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் பங்குபெறுகிறார்.

புதுமைச் சிந்தனையே என்ற தலைப்பில் திருமதி இசக்கிசெல்வி கோவிந்தன், திருமதி மீனாட்சி சங்கர், திரு சேதுராமன் ரமேஷ்ராஜா ஆகியோரும் பாரம்பரிய விழுமியங்களே என்ற தலைப்பில் திருமதி சக்திதேவி தமிழ்ச்செல்வன், திரு கேத்திரபாலன் மூக்காண்டி, திருமதி செவியின்பம் சங்கீதா ஆகியோரும் விவாதிக்கின்றனர்.

மாலை 5.30 மணிச் சிற்றுண்டியைத் தொடர்ந்து, சரியாக 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

செய்தி : தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

குறிப்புச் சொற்கள்