பாலர் பள்ளிச் சிறாருக்குப் புதிய நீச்சல் பயிற்சித் திட்டம் அறிமுகம்

பாலர் பள்ளிச் சிறாருக்குப் புதிய நீச்சல் பயிற்சித் திட்டம் அறிமுகம்

1 of 2
படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன் 
படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன் 

25 Nov 2026 - 8:51 pm

2 mins read

‘பிசிஎஃப் ஸ்பார்க்கில்டோட்ஸ்’ ஜூ சியாட் பாலர் பள்ளி மாணவர்களுக்கான மூவாண்டு நீச்சல் பயிற்சி முன்னோடித் திட்டம் புதன்கிழமை (நவம்பர் 25) தொடங்கியுள்ளது.

‘லிட்டில் வேவ்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தைத் தானா மேரா கன்ட்ரி கிளப் வளாகத்தில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டோங் சில நிமிடங்கள் பாலர் பள்ளி மாணவர்களுடன் பேசி மகிழ்ந்தார். 
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டோங் சில நிமிடங்கள் பாலர் பள்ளி மாணவர்களுடன் பேசி மகிழ்ந்தார்.  - படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன் 

நீச்சல் என்பது வாழ்நாள் முழுவதும் மிகுந்த தேவைக்குரிய ஒரு திறமை என்று ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டோங் கூறினார்.

“படிப்பு முக்கியமானது. முழுமையான வளர்ச்சியும் அத்தியாவசியத் திறன் வளர்ப்பும் அவ்வாறே,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் வெற்றியாளரான முன்னாள் தேசிய நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் தொடங்கிய ‘ஸ்போர்ட்ஸ் ஸ்கூலிங்’ நீச்சல் மையம் ‘லிட்டில் வேவ்ஸ்’ திட்டத்தின் வகுப்புகளை வடிவமைக்கும்.

திரு ஸ்கூலிங்கும் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்பிக்க முன்வந்துள்ளார்.
திரு ஸ்கூலிங்கும் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்பிக்க முன்வந்துள்ளார். - படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன் 

திரு ஸ்கூலிங்கும் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்பிக்க முன்வந்துள்ளார்.

தானா மேரா கன்ட்ரி கிளப் வளாகத்தின் அதே நீச்சல் குளத்தில் முதன்முதலில் நீந்தக் கற்றுக்கொண்ட அவர், இந்த முயற்சி தனக்கு ஏராளமான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார்.

“யாருக்குத் தெரியும்? அடுத்த ஒலிம்பிக் வெற்றியாளர் இங்கிருந்தும் மலராம்,” என்று செய்தியாளர்களிடம் திரு ஸ்கூலிங் கூறினார்.

2024ஆம் ஆண்டு ‘ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ என்ற பெயரில் சிறாருக்கான ஒரு நீச்சல் திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தினார் திரு டோங்.

நீச்சல், நீர்வழிப் பாதுகாப்புப் பாடங்களைத் பிள்ளை வளர்ச்சித் திட்டத்தில் இணைக்கும் முதல் ‘பிசிஎஃப் ஸ்பார்க்கில்டோட்ஸ்’ பாலர் பள்ளி இதுவாகும்.

2027ஆம் ஆண்டில் தொடங்கும் முதல் தவணையில் பாலர் பள்ளி மாணவர்கள் 50 பேர் சேர்க்கப்படுவர். மூவாண்டுக் காலத்தில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் பங்கேற்க இத்திட்டம் வழிவகுக்கும்.

நன்கொடை நிதியுதவியால் ஒரு பிள்ளைக்கு 400 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள 10 நீச்சல் பாடங்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.

ஒரு வகுப்பில் குறைந்தது 3 பிள்ளைகளும் பயிற்றுநருக்கு 6 பிள்ளைகள் என்ற விகிதமும் கொண்ட ஓராண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு பயிற்சியும் 40 நிமிடங்கள் நடைபெறும்.

தொடக்க நிகழ்ச்சியில் ஏறத்தாழ 60 பிள்ளைகள் பெற்றோர், ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சியைப் பாராட்டிய ராமு மெய்யப்பன், 48, தனது மகன் பள்ளிக்கு வெளியே நண்பர்களைச் சந்திக்க முடியும் என்பதால் நீச்சல் பயிற்சிகளில் சேர மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

“குழந்தைகளுக்கு முற்றிலும் புதிய ஒரு திறமையைத் தொடர்வதற்கான நம்பிக்கையை இதுபோன்ற முயற்சிகள் அளிக்கின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
பாலர் பள்ளிசிறார்நீச்சல்