சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா 2025 – ‘பெரியாரும் சிங்கப்பூரும்’ என்ற தலைப்பில் இம்மாதம் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவார்.
விழாவில் கல்வியாளர், சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் மு.அ.மசூது அவர்களைப் பாராட்டி ‘பெரியார் விருதும்’ தமிழ்மொழிப் போட்டிகள் 2025ல் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பும் நடைபெறவுள்ளது.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த ஆண்டில், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் தனது 20ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் இளையர்கள் பங்குபெறும் சிறப்புக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘பெரியார் பணி 2025’ என்ற விழா மலரும் வெளியிடப்படவுள்ளது.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

