புனித வெள்ளி (ஏப்ரல் 3) நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் காட்சிகளைப் பெரும்பாலான தேவாலயங்கள் மேடையேற்றுவது வழக்கம்.
இந்த ஆண்டு சற்று வித்தியாசமான படைப்பை அரங்கேற்றியது பிரின்ஸ் சார்லஸ் கிரெசண்டில் உள்ள ‘என் இரட்சகர்’ ஆலயம்.
‘கெட்ட குமாரன்’ நாடகம், கிறிஸ்தவர்களின் இறை நூலில் இடம்பெறும் கதை ஒன்றை மையமாகக்கொணடு படைக்கப்பட்டது.
தந்தையிடமிருந்து சொத்தைப் பெற்று வெகுதூரம் சென்ற ஒரு மகன் எல்லாவற்றையும் இழந்து மீண்டும் தந்தையிடம் திரும்பும்போது அவனைத் தந்தை சிறிதேனும் முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொள்வார்.
அதேபோல இறைவனும் தம்மை நாடி வருவோரை ஏற்றுக்கொள்வார் என்பதை முன்னிறுத்துகிறது ‘விலையற்ற அணைப்பு’ நாடகம்.
ஒன்பது ஆண்டுகளாக மேடை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் பங்காற்றி வரும் கெட்ட குமாரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த 22 வயது டெல்வின் ஜேய்டன் மேடை நாடகத்தில் நடிப்பது இதுவே முதன்முறை.
“வழிதவறிய மகன் தம்மை அணுகும்வரை காத்திராமல், மகனைக் கண்டவுடனே அவனை ஆரத்தழுவினார். அதற்கு ஒப்பான ஆழமான அன்பையே கடவுள் நம்மீது கொண்டுள்ளார் என்பதைக் கிறிஸ்துவம் போதிக்கிறது,” என்றார் டெல்வின்.
இந்நாடகம் சிறப்பாக அரங்கேறியதற்கு பலரின் பங்களிப்பு உள்ளது. என் இரட்சகர் ஆலயத்தின் கலைக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆலயத்தில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து படைத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
நாடகங்களுக்குப் பல்லாண்டுகளாக இசையமைத்துவந்த 27 வயது இஸ்ரவேல் சுப்பிரமணியம், “இசைக்கான எங்கள் ஆர்வத்தால் பல அமைப்பு வகைகளையும் கற்றுக்கொண்டு இசை அமைத்து வருகிறோம்,” என்றார்.
நாடகங்களுக்குப் பல்லாண்டுகளாக இசையமைத்துவந்த 27 வயது இஸ்ரவேல் சுப்பிரமணியம், “இசைக்கான எங்கள் ஆர்வத்தால் இதனைச் செய்கிறோம்,” என்றார்.
இஸ்ரவேலுடன் பணியாற்றும் 23 வயதான ஷரூன் லோகநந்தன், பரபரப்புமிக்க வாழ்க்கை முறைக்கு இடையிலும் இதனைச் செய்வது மனநிறைவு தருவதாகக் கூறுகிறார்.

