சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர்களையும் இளம் தலைமுறையினரையும் ஊக்குவிக்கும் நோக்கில் சில போட்டிகளைக் கவிமாலை அமைப்பு அறிவித்துள்ளது.
சிறந்த கவிதை நூலுக்கான விருது 2026
2025ஆம் ஆண்டு (01.01.2025 முதல் 31.12.2025 வரை) முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட கவிதை நூல்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்படும்.
சிங்கப்பூரர், நிரந்தரவாசி அல்லது சிங்கப்பூரில் தொடர்ந்து 10 ஆண்டுகள் வேலை அனுமதி அட்டையுடன் பணியாற்றிவரும் கவிஞர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
கவிதைகள் எந்த வகை அல்லது பாவினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் நூலின் நான்கு பிரதிகளை 2026 மார்ச் 20ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
நியமிக்கப்பட்ட நடுவர்கள் சிறந்த நூலைத் தேர்ந்தெடுப்பர். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும். பரிசு பெறும் நூலுக்கு கவிமாலை நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கவிதை நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: Blk 9 #07-30, Selegie house, Singapore 180009.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டி 2026
தமிழ்மொழி விழா 2026ஐ முன்னிட்டு, தொடக்கநிலை (1–6) மாணவர்களுக்காகக் கவிதை சொல்லும் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பிரிவு 1: தொடக்கநிலை (1, 2, 3ஆம் நிலை மாணவர்கள்)
‘ஈடுபாடு’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கவிதைகளைச் சொல்ல வேண்டும். அதிகபட்ச நேரம்: 2 நிமிடங்கள்.
பிரிவு 2: தொடக்கநிலை (4, 5, 6ஆம் நிலை மாணவர்கள்)
மரபுக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும். எந்த வகை இலக்கணத்திலும் எழுதப்பட்டவையாக இருக்கலாம். அதிகபட்ச நேரம்: 3 நிமிடங்கள்.
பொது விதிமுறைகள்
காணொளியில் ஒலி, ஒளி தெளிவாக இருக்க வேண்டும்.
காணொளியில் மாணவரின் பெயர், பள்ளி, தேர்ந்தெடுத்த கவிதையின் தலைப்பு, எழுதியவரின் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, கவிதைகளை மனப்பாடமாகச் சொல்ல வேண்டும்.
ஒருவர் ஒரு காணொளி மட்டுமே அனுப்பலாம்.
இதில் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் காணொளியைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள்: 20.03.2026.
நேரடிப் போட்டிக்குத் தேர்வு பெறும் மாணவர்களுக்கு 28.03.2026க்குள் அறிவிக்கப்படும்.
நேரடிப் போட்டி விவரம்
நாள்: 04.04.2026 சனிக்கிழமை நேரம்: மாலை 3.00 மணி இடம்: The Pod, தளம் 16, தேசிய நூலகம், 100 விக்டோரியா சாலை, சிங்கப்பூர் 188064
பரிசுகள்:
முதல் பரிசு – $150 இரண்டாம் பரிசு – $100 மூன்றாம் பரிசு – $50 ஊக்கப்பரிசு – $30 (ஒவ்வொரு பிரிவிலும்)
பொதுமக்களுக்கான கவிதைப் போட்டி
பிரிவு 1 : மரபுக் கவிதை
பிரிவு 2: புதுக்கவிதை/ நவீன கவிதை / ஹைக்கூ கவிதை
சிங்கப்பூரில் வசிக்கும் எவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஒருவர் ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
கவிதை அதிகபட்சம் 24 வரிகளுக்குள் இருக்கவேண்டும். ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்
சிங்கப்பூர் வாழ்வியல் சார்ந்த கருப்பொருளில் இருக்க வேண்டும் .
ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
நடுவர்களின் முடிவே இறுதியானது.
போட்டிக் கவிதை வேறெந்த அச்சு / மின்னணு ஊடகங்களிலோ வெளியிட்டிருக்கக் கூடாது.
போட்டிக் கவிதைகளைக் கூகல் படிவம் https://tinyurl.com/Poem-Submission-URL வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்மொழி விழா 2026 போட்டிக்கவிதை என்று குறிப்பிட்டு அனுப்பவும்.
மேல் விவரங்களுக்கு kavimaalaisg@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியையோ 91461400, 8332 7357, 9003 4103 என்ற தொலைபேசி எண்களையோ நாடலாம்.

