கால்நூற்றாண்டுகால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் வெளியீடு

கால்நூற்றாண்டுகால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் வெளியீடு

1 of 2
படம்: சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை
படம்: சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை

18 Oct 2026 - 6:00 am

1 mins read

தமிழ்நாட்டின் நன்னூல் பதிப்பகம் தொகுத்து வெளியிட்ட ‘கால்நூற்றாண்டுகால (2000-2025) இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்’ என்ற தொகுப்பு தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

இரு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர்களின் ஒன்பது கதைகள் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலம், சிங்களம், மலையாளம், தெலுங்கு, வங்காளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அந்நூல்களின் வெளியீட்டு, அறிமுக நிகழ்வு அண்மையில் இலங்கையில் நடைபெற்றது.

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சார்பாக சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் முஹம்மது பிலால் கலந்துகொண்டார்.

பின்னர் அந்நூல்களின் இரண்டாம் கட்ட அறிமுக நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய திரு பிலால், “இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் எழுத்தாளர்களின் ஒன்பது படைப்புகளும் படைப்பிலக்கியத்தின் கால ஆவணமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன,” எனக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகள் முதன்மைத் தொகுப்பிலிருந்து தனியாக சிங்களம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தனித்தொகுப்பாகவும் வெளியிடப்பபட்டுள்ளன.

விரைவில் ஆங்கிலத்தில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு செய்த நூலும் வங்காள மொழியில் சாந்தி நிகேதன் பல்கலைக்கழக ஆய்வு முனைவர் சத்தீஸ்வரன் மொழிபெயர்ப்பு செய்த நூலும் வெளியிடப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்