வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஸூம் தளம் வழி எழுத்தாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
‘எழுத்தாளர்கள் சுபா ஓர் உரையாடல்’ என்ற அந்நிகழ்வுக்கு வாசகர் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ், ஏ.என்.பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதும் புனைப் பெயராகும்.
இவர்கள் இருவரும் தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றனர்.
இவ்விரு எழுத்தாளர்களையும் சந்தித்துப் பேச விரும்புவோர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
நிகழ்வுக்குரிய விவரங்கள் Meeting ID: 967 3820 2784, Passcode: 438250.