‌வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் மதுரை இராமகிரு‌‌ஷ்ணன் சிறப்புரை

‌வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் மதுரை இராமகிரு‌‌ஷ்ணன் சிறப்புரை

படம்: இராமகிரு‌‌ஷ்ணன்

02 Oct 2026 - 7:00 am

1 mins read

தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் நடத்திவரும் வாசிப்பை ஊக்குவிக்கும் ‘ரீட் ஃபார் புக்ஸ்’ நிகழ்ச்சி, பத்தாம் ஆண்டுநிறைவையொட்டி ‘ரீட் ஃபார் குட்’ என்ற புதிய பெயருடனும் புதுப்பொலிவுடனும் இவ்வாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, சிறப்பு வாசிப்பு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் லிஷா இலக்கிய மன்றமும் ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர் பெரியார் சமூக மன்றமும் மாதவி இலக்கிய மன்றமும் ஆதரவளிக்கின்றன.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த இளம்பேச்சாளர் மதுரை இராமகிருஷணன் சிறப்புரையாற்றவுள்ளார்.

பொதுமக்களை ஒன்றிணைத்து வாசிப்பின் அவசியத்தை எடுத்துரைப்பதுடன், சமூக நலனுக்காகப் பங்களிக்கும் அர்த்தமுள்ள முயற்சியாக வாசிப்பை முன்னெடுப்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

வாசிப்பு, சமூகப் பங்கேற்பு, சமூகத்திற்கு நம்மால் முடிந்ததைத் திருப்பிக் கொடுப்பது ஆகியற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் இளையர்களும் கலந்துகொண்டு வாசிப்பின் நோக்கம், தாங்கள் வாசித்த புத்தகங்கள் பற்றிப் பேசவிருக்கின்றனர்.

அனுமதி இலவசம்.

மேல்விவரங்களுக்குத் திரு கண்ணன் சே‌ஷாத்ரியைத் தொடர்புகொள்ளலாம். கைப்பேசி எண்: 93807092.

குறிப்புச் சொற்கள்