தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தமிழ் வளர்ச்சியில் இளையர்களின் பங்கு’: மொழிபெயர்ப்பு, காணொளித் தயாரிப்புப் போட்டிகள்

2 mins read
063d0e27-7247-4fa6-86bc-393fd6a4c5eb
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் இளையர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டிகளையும் காணொளித் தயாரிப்புப் போட்டிகளையும் நடத்துகிறது. - படம்: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்/ ஃபேஸ்புக்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில், ‘தமிழ் வளர்ச்சியில் இளையர்களின் பங்கு’ என்பதை மையமாகக் கொண்டு மொழிபெயர்ப்புப் போட்டிகளும் காணொளித் தயாரிப்புப் போட்டிகளும் செப்டம்பர் 6ஆம் தேதி (சனிக்கிழமை) உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளன.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் நடைபெறவுள்ள இப்போட்டிகள், தமிழ் இளையர் விழா 2025ன் ஓர் அங்கமாகும். மொழிபெயர்ப்புப் போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடைபெறும்.

மொழிபெயர்ப்புப் போட்டிகள்

முதல் பிரிவு உயர்நிலை 3, 4 மாணவர்களுக்கானது. சிங்கப்பூர் எழுத்தாளரின் ஓர் ஆங்கிலப் படைப்பின் ஒரு பகுதியை மாணவர்கள் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். போட்டியில் பங்குபெற https://forms.gle/kbrWbbftcJ91s4iGA எனும் இணைப்பில் முன்பதிவு செய்யவும்.

இரண்டாவது பிரிவு தொடக்கக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கானது. சிங்கப்பூர் ஆங்கில செய்தித்தாளிலிருந்து 200 சொற்கள் இருக்கும் ஒரு பகுதியை மாணவர்கள் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். போட்டியில் பங்குபெற https://forms.gle/C98xRoQb4ajDrDNr6 எனும் இணைப்பில் முன்பதிவு செய்யவும்.

மூன்றாவது பிரிவில் 25 முதல் 35 வயது வரையிலான இளையர்கள் பங்குபெறலாம். அவர்கள் நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூவின் படைப்புகளிலிருந்து 250 வார்த்தைகள் கொண்ட ஒரு பகுதியை மொழிபெயர்க்க வேண்டும். இப்போட்டியில் பங்குபெற https://forms.gle/vTBLEcDx42GZm13BA எனும் இணைப்பில் முன்பதிவு செய்யவும்.

காணொளி தயாரிக்கும் போட்டிகள்

உயர்நிலை 3, 4 மாணவர்கள் ‘மூப்பில் இளமை’ என்ற கருப்பொருள் கொண்ட காணொளியைத் தமிழில் தயாரிக்கவேண்டும். பெற்றோரையும் மூத்தோரையும் அன்புடன் அரவணைத்து பேணிக்காத்தால் மனநலமும் உடல்நலமும் சீராகவும் இளமையாகவும் இருக்கும். அதனால், வயதான பின்பும் இளமையாக இருக்கலாம் என்ற மனிதநேய சிந்தனையை உள்ளடக்கிய கருப்பொருளில் காணொளி இருக்கவேண்டும். போட்டியில் பங்குபெற https://forms.gle/AZ8vL12uXjVthmuw6 எனும் இணைப்பில் முன்பதிவு செய்யவும்.

போட்டியில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு ரொக்கப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படும். நான்காம், ஐந்தாம் இடங்களில் வருவோருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேல்விவரங்களுக்குத் திரு மனோகரை 8414 5438 எண்ணில் தொடர்புகொள்ளலாம், அல்லது pcsstlc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

போட்டியின் விவரங்கள்.
போட்டியின் விவரங்கள். - படம்: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்/ ஃபேஸ்புக்
குறிப்புச் சொற்கள்